பிணவாசனை..

ஒரு சின்ன முயற்சி.. இது ஒரு திகில் கதை.. நான் தொடங்கி வைக்கிறேன்.. அனைவரும் இதில் புதுபுது திருப்பங்களுடன் சுவாரஸ்யமாய் எடுத்து செல்லலாம்.. என்ன சொல்றீங்க..?

————————————-

கும்மென்ற அகன்ற இருட்டு. கீச்ச் கீச்ச் என்ற மரவண்டின் சத்தம் மட்டும் உச்சமாக கேட்டுக்கொண்டு இருக்கிறது. மெல்ல புளிய மரத்தினில் நிழலில் ஊடுரும் வெளிச்சத்தில் கழுத்து அறுப்பட்ட ஒரு பிணத்தின் அருகில் ரம்யா. அந்த உடலின் கழுத்தில் இருந்து ரத்தம் வெதுவெதுப்பாக மெல்ல தரையை முத்தமிட்டுக்கொண்டு இருந்தது. திறந்தவாயும் வெளியே வந்துவிடும் அளவு உயிர்பிச்சை கேட்ட கண்களும் பார்பவர்களை மிரளச் செய்யும் நிலையில் இருந்தன. ரம்யாவின் மிரண்ட கண்கள் ரத்தத்தை நிரப்பி இருந்தது.

ரம்யாவின் கைகளில் இருந்த கத்தியில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது தெறித்து கைவிரல்கள் அனைத்தும் அந்த சிவப்பான ரத்ததத்தில் தோய்ந்து கெட்டியாகி இருந்தது. சுற்றும் முற்றும் பார்வையை அலையவிட்டப்படி ரம்யா மேலே வானத்தை பார்த்துக்கொண்டு இருக்கும்போது அவர் கால் மீது ஏதோ ஊர்ந்து செல்லும் உணர்வ்வில் கீழே பார்க்க…”ஹோவ்வ்வ்..” என்று கத்திக்கொண்டு மயங்கி கீழே சரிந்தாள்.சட்டென்று மிரண்ட அந்த கட்டுவிரியல் நாக்கைவெளியே நீட்டி ஆட்டியப்படி மினுமினுக்கும் கண்களுடன் அலைந்து அலைந்து வேகமாக கீழே கிடக்கும் கூழாங்கற்களின் மீது ஊர்ந்து சென்றது.

அப்போது…

லீனா அண்ணா தொடர்கிறார்

துரத்தில்…….
மிக வேகமாக அந்த வண்டி வந்து கொண்டிருந்தது.அதன் முன் விளக்குகள் பளீரென எரிந்து அந்தச் சாலையை வெளிச்சமாக்கியது.அதனுள்ளே, சமீபத்தில் போலீஸ் சூப்பிரண்டண்ட் பதவியேர்ர லீனா மிகவும் ளைப்புடன் சாரதியின் பக்கத்து இருக்கையில் லமர்ந்திருந்தார்.
அந்த சந்திர வெளிச்சத்தில் கூட அவரது கம்பீரமான் தோற்றம் அவரை ஒரு நேர்மையான அதிகாரி என்பதைப் பறை சாற்றியது.கழுத்தற்பட்ட பிணத்திற்கு அருகே ரம்யா மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடந்த இடத்தை அந்த வண்டி அண்மிக்கப் போகும் போது,

சாலையின் குறுக்கே…….

மற்றொருவர்

கழுத்தறு பட்ட பிணத்திற்கு அருகே ரம்யா மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடந்த இடத்தை அந்த வண்டி அண்மிக்கப் போகும் போது, அதன் சத்தம் மயங்கிய ராம்மியாவை எழுப்பியது

சாலையின் குறுக்கே…….

ஒரு பெண் அவசர அவசரமாக ஓடுவதை பார்த்த லீனா ………அந்த பெண்ணை பிடிக்க உத்தரவு இட்டார். ரம்யாவோ சாமர்தியமாக சாலையை விட்டு புதர்களில் ஒடினார். ஜீப் சற்று வேகம் குறைக்க ஒரு கல்லை எடுத்து சாரதியின் தலையை குறிவைத்து அடித்தார் ரம்யா , தடுமாறிய ஜீப் ஒரு மரத்தில் மோதி நின்றது. ஜீப் சாரதி அங்கேயே சரிந்தார். லீனா வின் கை துப்பாக்கியின் ட்ரிகர் இடித்த அதிர்வில் ஜாம் ஆனது. லீனாவுக்கு தொல்பட்டையில் நல்ல அடி.
சமிபத்தில் பெய்த மழையில் ஒரு பெரிய வேப்பமரம் ஒன்று விழுத்து கிடந்தது. அதில் இருந்து ஒரு பெரிய கிளையை உடைத்து எடுத்தார் ரம்யா……..துப்பாக்கியும் வேலை செய்யவில்லை , தொலில் அடி. தொடை நடுங்க ரம்யாவை நோக்கினார் போலிஸ் சூப்பிரண்டன்டன் லீனா……………………….

மீண்டும் நானே..

லீனா தைரியமாக முன்னேறினார்.. வேலை செய்யாத துப்பாக்கியை தூக்கி எறிந்துவிட்டு தன் இடக்காலை மேலே தூக்கி ஷூவுக்குள் வைத்திருக்கும் பிஸ்டலை எடுத்து ரம்யாவின் முகத்தை நேராக குறிவைக்கும் நேரத்தில் அக்கோரமான இடி ஒன்று இடிக்கிறது. மின்னலும் பளிச் பளிச்சென்று வெட்டும் நேரத்தில் இருவரின் முகங்களை கண்டுக்கொள்கிறார்கள்..

“ரம்யா தங்காய்.. நீயா அது..? ” அதிர்ச்சியுடன் வினவ…

“கிட்ட வராதீங்க…” என்று சொல்லிக்கொண்டே ரம்யா பின்வாங்கிக்கொண்டு போக..

“இதோ பார்.. உனக்கு என்ன ஆச்சு..?நீ ஏன் கொலைபண்ண.. யார் அது..? எதுக்காக கொலை செஞ்ச.. நான் உன் அண்ணன் இருக்கேன்மா.. நீ கவலைப்படாதே.. நீ அமைதியா சரண்டர் ஆகிடு.. தப்பிக்க நினைச்சா வீண்விபரீதம்தான் மிச்சம்..”

“இல்ல.. என்கிட்ட நெருங்காதீங்க..” என்று கூறி தளர்ந்த ரம்யா தரையில் அப்படியே அழுதபடி சரிகிறார்.. ஒருபுறம் சேற்றில் உக்கார்ந்து சோர்ந்து அழும் ரம்யா. இன்னொருபக்கம் என்ன ஏதென்று அறியாமல் யாரோ என்று நினைத்து வந்தால் தன் சொந்த தங்கையை எதிர்பார்க்காமல் திகைத்து இது கனவா என்று நினைக்கும் லீனா ஒருபுறம்.. அந்த வேளையில் ரம்யா தன் இருகைகளால் அங்கிருந்த சேற்றை அள்ளி லீனாவின் முகத்தில் அடிக்கிறார்.. சடக்கென்று மிரண்ட லீனாவிற்கு கண்களின் சேறும் சகதியும் புகுந்துக்கொள்ள இந்த இடவெளியில் ஓட்டம் பிடிக்கும் ரம்யாவை கஷ்டப்பட்டு துரத்துக்கிறார் லீனா..

Add comment செப்டம்பர் 14, 2007

சில்லென்று சிலக்கொலைகள்

என் சொந்த கிராமத்திற்கு சென்று அதிக நாட்களாகிவிட்டது. அதன் வாசம் என்னை வா! வா!! என்றழைக்கத் தொடங்கி விட்டது. என்ன இருந்தாலும் தாய்மண் தாய்மண்தான். சுத்தமான காற்றும் வயல் வெளிகளும், சில்லென்று சிரிக்கும் பெண்களும் நினைக்கவே ஒரு கிளர்ச்சி வந்தது.

விளைவு கிராமத்தில் நான்……போன இரண்டு நாட்களும் என் நெருங்கிய நண்பன் செல்லா என்னுடனே இருந்தான். அவன் உலக விசயங்களாகட்டும் உள்ளூர் விசயங்களாகட்டும் அழகாக பேசுவான். ஜாலியோடும் அதேநேரம் அதற்கு வேலியோடும் இருப்பான்.

முதல் இரண்டு நாட்கள் மிகவும் ஜாலியாக கழிந்தது. மூன்றாம் நாள் மதியம் செல்லாவுக்கு ஒரு ஆசைபிறந்துவிட்டது.

“செல்லா.இன்னிக்கு தண்ணி அடிக்கலாம்னுதான் சொல்றியா….? நான் எல்லாம் ரொம்ப ரொம்ப யோக்கியமானவன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…. அதான் யோசிக்கிறேன்….” என்று கிண்டலடித்தேன்.

“யோக்கியமானவனே..! கொஞ்சம் மூஞ்ச காட்டு.. டேம்ல போய் அடிச்சதுக்கு பேர் என்ன..? அடேங்கப்பா..!! என்னா குட்டி இப்படி புளுகிற..”

“அது எத்தன வருசத்துக்கு முன்னாடி.. இப்ப எல்லாம் சுத்தமா இல்லை செல்லா….”

“அடபாவி..ஓவரா பீர் குடிச்சு குடிச்சு உடம்பு குஷ்பூ கணக்கா ஏத்தி வைச்சிக்கிட்டு சினிமா டயலாக்கை உட்ற. இதெல்லாம் எவனாவது கேனகிறுக்கன்கிட்ட போய் சொல்லு நம்புவான்.”

“அதான் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கிறேன்.”

“இன்னும் நீ கொஞ்சம் கூட அடங்கவே இல்லடா.சரி இன்னிக்கு மஜாதான். கம்முனு சும்மா வா.”

“சரிய்…. ஓகேய்… உனக்காக வரேன்.”

“இப்படி வசனம் உட்டுட்டு எல்லாத்தையும் மிஞ்சம் வைக்காம குடிச்சிடுவ பாரு.”

சிரித்தபடி, ” எவனுக்கு தெரியும். நடந்தாலும் நடக்கலாம்..” என்று பிட்டைபோட்டு வைத்தேன்.

“ஒரே ஒரு கண்டிசன். யாருக்கும் தெரியகூடாது..”

“சரி நம்ம வீட்டுக்கு மேலே இருக்கிற காட்டில் வைச்சிக்கலாமா?”

“வீட்டுக்கு போனா மாட்டிக்க மாட்டோமா செல்லா..?”

“ம்ம்… சரி.. நைட் அங்கியே தங்கிடலாமா? ஒரு டிப்ரண்டா இருக்க்கும்னு தோணுது.”

“சரி, வுடு ஜூட்…. இப்போ மணி 3 மணி, நைட் 9 மனிக்கு மேலதான்.”

“சரிதான், ஆனால் பக்கத்துல வாங்கவேண்டாம் குட்டி.பாப்பிரெட்டிப் பட்டி பக்கம் போய் வாங்கிட்டு ஒண்ணும் தெரியாதப் பாப்பா மாதிரி காட்டிக்குள்ள போய்டுவோம்.”

வண்டியை கிளப்பிக் கொண்டு கிளம்பினான் செல்லா.. வண்டி மெதுவாக போய்க் கொண்டு இருந்தது.அப்படி இப்படி என்று கன்னாப ின்னாவென்று சுத்தி சரியாக இரவு 8.30 மணிவாக்கில் ஒரு கடையில் சரக்கை வாங்கி பையில் பத்திரப்படுத்தினான் செல்லா.
அங்கிருந்து கிளம்பி ஒரு சின்ன குட்டி ஓட்டலுக்கு போய் சிக்கன், முட்டை, மட்டன், வாட்டர் பாட்டில் என்று சகல முப்பத்திரெண்டு சாமான்களையும் வாங்கிக் கொண்டு வந்தான்.

” அண்ணாச்சி! ஊறுக்கா வாங்கி ஆச்சா?”

“நாய குளிப்பாட்டி நடு வூட்ல வைச்சாலும் நக்கிதான் குடிக்கனும்னு சொல்றது உன் விசயத்துல அப்படியே நூறு வீதம் சரியாதானடா இருக்கு.” என்று சொல்லியபடியே வாங்கிவந்தான் செல்லா.

இப்போது உடம்பெல்லாம் கொஞ்சம் கிறுகிறுப்பாகிவிட்டது இருவருக்கும்.இரவு நேரம் கையில் சரக்குடன் ஆள் அரவமற்ற சாலையில் பயணிக்கிறோம்.சரியாக முப்பது நிமிடத்தில் வீட்டுக்கு அருகில் வந்து வண்டியை சத்தமில்லாமல் தூரமாகவே எஞ்சினை வீட்டின் தாழ்வாரத்தில் நிறுத்தி விட்டு வந்துவிட்டான் செல்லன்.

“சரி போகலாம் வா….!”

காடு, பழகிய இடமென்றாலும் இரவில் லேசான நிலா வெளிச்சத்தில் நடப்பது குளிர்ச்சியாகத்தான் இருந்தது.அந்த காடு என்று இயற்கையாய் வளர்ந்த காடல்ல. அரசாங்கம் செயற்கையாக வைத்து வளர்த்த மரங்கள் அவை.எல்லாம் 60 வருடங்களுக்கு முந்தையவை. ஓரளவு சுமாரான மழைப்பெய்யும் பகுதி ஆதலால் மரங்கள் பெரிதாக காயாமல் தாக்குபிடித்துகொண்டன.புளியமரக் காடு ஒரு கிலோ மீட்டரைத் தாண்டி உள்ளே, சிவப்பு சந்தனம் என்ற பகுதியை அடைந்தோம்.என்ன சவடால் பேசினாலும் ஆள் அரவமில்லாத இடத்தில் நடுக் காட்டில் இருப்பது நெஞ்சில் ஒரு திக்திக்கை ஏற்படுத்தியது.பாம்பு ஏதும் இருக்குமோ என்ற பயம் என்னை உறுத்திக் கொன்றது.எனக்கு சுத்தமாய் பிடிக்காத உயிரினம் பாம்பு. அதை கண்டால் இந்த வயதிலும் நடுநடுங்கி விடுவேன்.அந்த வழவழப்பும். நாக்கை லபக் லபக் என்று வெளியே நீட்டுவதும். சனியன் பிடிச்சது….. இந்த நட்ட நடு ராத்திரிதான் எல்லாம் நினைவுக்கு வரனுமா?

“செல்லா…! எங்கே போறோம்….?”

“குட்டி, அந்த சின்னணைக்கு போய்டலாமா?”

“சரி செல்லா. ராத்திரில காடு ஒரு மார்க்கமாதான் இருக்கு. என்ன இப்படி இருக்கு? ச்சே! இப்படி தெரிந்திருந்தா கம்முனு வேற எங்கியாவது ஆட்டைய போட்டிருக்கலாம்.”

குறிபப்ிட்ட அந்த இடத்தை அடைந்தோம்.’சின்னணை’ என்பது காட்டில் மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போது, அதைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தி வைக்க வேண்டி, ஒரு சின்ன அணைபோல ஒரு தடுப்புசுவர் மட்டும் கட்டி இருப்பார்கள்.இந்த காட்டில் அப்படி பல இடங்களில் கட்டி இருப்பார்கள். எனக்கு தெரிந்து ஒரு ஆறேழு இருக்கும்.மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போது அதில் தேங்கிப் போகும். நீர் நிற்கும் பகுதியில் மணல் இருந்தது.நாங்கள் போனது கோடைக் காலமானதால் தண்ணீர் இல்லை. மணல்தான் இருந்தது.ஆடு, மாடு, நரி என்று நடந்து பழகி போய் இருந்தது மணல்.

வந்த களைப்பில் வேகமாக உக்கார்ந்து அப்படியே மணலில் மல்லாந்தேன்.
வானத்தைப் பார்த்தப்படி கொஞ்ச நேரம் இருந்தேன். அதற்குள் செல்லா எல்லாத்தையும் எடுத்து வைத்தான்.மொபலை எடுத்து சிக்னல் கிடைக்கிறதா என்று பார்த்த்தேன். ‘அடடா! சிக்னல் கிடைக்கிறதே!! தொழில் நுட்பம் ரொம்பதான் வளர்ந்து போச்சு’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அந்த மொபைல் கேமிராவில் இருந்தே இருட்டில் சில போட்டோக்கள் எடுத்த்துக் கொண்டேன்.பாட்டில், சின்னப் புதர், காய்ந்த மர இலைகள் உடைந்துபோன சுவர்……… ஆள் அரவமில்லாத அந்த சூழல் புதுவித உற்சாகத்தை கொடுத்தது. இன்னும் நாலு நண்பர்களை அழைத்து வந்திருக்கலாம் இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். தப்பு செய்துவிட்டோம் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.

“சரி வா! எனக்கு பசிக்குது குட்டி. சீக்கிரம் ஆட்டம் தொடங்கலாம்.”

“உனக்கு கொஞ்சம் கூட கலாரசனையே இல்லையா? மனசெல்லாம் ஒருமாதிரி கிறுகிறுப்பா இருக்குங்க. பகல்ல எத்தன முறை வந்தாலும் இப்படி நட்ட நடு சாமத்துல உன்மையாகவே ரொம்ப நல்லா இருக்கு இந்த காடு செல்லா.”

“ஆமா குட்டி. எனக்கும் இதுதான் முதல். இப்படி நம்ம வீட்டு பக்கமிருந்தாலும் நமக்கு அதனோட வீரியம் கம்மியாதான் தெரியுது. புதுசா பாக்கிறவங்களுக்கு நம்மைவிட இன்னும் பிடிக்கும்.”

“ஆமா செல்லா.. சரி எப்போ செல்லா கல்யாணம்.”

“இன்னும் கொஞ்சம் செட்டிலாகனும். என்ன குட்டிபண்றது. விவசாயத்தை நம்பி ஒரு பொழப்பும் செய்ய முடியல. இந்த வருசம் மழை பெய்ஞ்சா அடுத்த வருசம் சுடுகாடாகிடுது. ஒரே வெறுப்பா இருக்கு. இப்ப பொக்லைன் வண்டி ஒன்னு வாங்கி இருக்கேன். மைசூர்ல போகுது. உனக்கு தெரியும்தானே…..!”

பேசிக் கொண்டே கொஞ்சம் சியர்ஸ் சொல்லி கொஞ்சமாய் உறிஞ்சினேன்…..
சட்டையை லூஸாக்கி தொப்பையை வெளிக்காட்டியப்படி செல்லா இருந்தான்.
நானும் பட்டனை லூஸாக்கிக் கொண்டேன். காற்று என் நெஞ்சில் வேகமாய் பட்டு த்தெறித்தது.என்னதான் வீடு ஆப்பிஸ் ஏசி, பூசி என்று சுத்தினாலும் இயற்கைக்கு முன்னாடி வெறும் தூசிதான்னு மனதில் தோன்றியது.

“தெரியும்…. அதான் கேட்கிறேன். இன்னும் என்ன பிரச்சனை. இப்பவே தலக்கு 31ன்னு நினைக்கிறேன்.”

“இப்ப அதில்ல ப்ரச்சனை. அந்த வண்டி கடன் கொஞ்சம் இருக்கு. அத முடிச்சிட்டு உடனே.” சிரித்தான் செல்லன்.

“ம்ம்…. தெரியும்.. ஆனா சீக்கிரமா முடிச்சிடுங்க.. அப்புறம் பிறக்கிற பையன் உங்களை தாத்தான்னு கூப்பிட்டுட கூடாது இல்லையா..?

“கூப்பிடுவான் கூப்பிடுவான்.. பிச்சிடமாட்டேன்.. நாங்க எல்லாம் எப்பவும் யூத்துதாண்டா புண்ணாக்கு.. நீ மட்டும் என்ன பதினெட்டு பாலகனா..? “

பந்து என் பக்கம் திரும்புவதை நைஸாக புரிந்துக்கொண்டு பேச்சை மாற்றினேன்.

” கழுத அதை விடுங்க.. என்ன சினிமா பாத்தீங்க கடைசியா?”

“இவ்வளவு வேகமாவா பேச்சை மாத்தறது.. பாவி.. ம்ம்ம்.. மொழி. நல்ல படமா இருந்தது.”

கெக்கேக்கே என்று சிரித்தப்படி “நல்ல படம்தான்…. ஆனால் இன்னும் நம்ம சினிமா வேற மாதிரி சிந்திக்கனும். இந்தி எல்லாம் நல்லா மாறிடுச்சு. நம்ம வாழ்க்கையே இன்னும் மாறல.”

“உனக்கு மப்பு ஏறிடுச்சா? சினிமா வசனம் பேசற. பத்து வருசம் முன்னாடி ஓட்டை டவுசர் போட்டுட்டு இருந்தோம். இப்ப அப்படியா இருக்கிறோம். வாழ்க்கல எல்லாம் மாறிட்டுத்தான் இருக்கும். நாமளும் மாறறோம். தைரியமா இருடா. நமக்கும் ஒருநாள் சரியா விடியும் “

அதற்கு பிறகு நானும் அவனும் பேசாமல் கொஞ்ச நேரம் கழித்தோம்.
அமைதியான அந்த சூழலை ரசித்தபடி அவனும் இருப்பதாக எனக்கு பட்டது.
நேரம் பார்த்தேன். பனிரெண்டை தாண்டி இருந்தது.

“செல்லா இங்கேயே படுத்துக்கிடலமா….?”

“ஆமா குட்டி எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு. இங்கேயே படுத்து இருந்து விட்டு காலைல வீட்டுக்கு போய்டலாம்.”

“ஆமா செல்லா.. எனக்கும் அப்படிதான் இருக்கு. அசதியா இருக்கு. போனா வூட்லயும் மாட்டிக்குவோம்.”

“குட் நைட்பா.”

“குட் நைட் இல்லை.. பாரஸ்ட் நைட்”

என்று மெல்ல கண்ணை மூடினேன். அதற்குள் செல்லா குறட்டைக்கு முன்நிலைக்கு சென்றுவிட்டான். எனக்கு தூக்கம் பிடிப்பது சற்று கடினமாக இருந்தது. உடம்பில் அசதி இருந்தாலும் புது இடம் என்பதால் எனக்கு தூக்கம்பிடிக்க ஒருமாதிரியாகதான் இருக்கும். மனுசனா அவன் என்று நினைத்துக்கொண்டேன்.
படுத்து கண்ணசந்த சிறிது நேரத்தில் ஏதோ அருகில் சலசலப்பு கேட்டது.
மனதில் திடுக்கென்று ஏதோ கவ்விக் கொண்டது. செல்லாவைப் பார்த்தேன்.
நல்லா தூங்கிக் கொண்டு இருந்தான். நான் நகர்ந்து என்ன என்று நாற்புறமும் கண்களை அலைய விட்டேன்.
ஒரு 50 அடித் தொலைவில் ஒரு பத்துப் பேர் சுற்றி நின்று கொண்டு எதையோ செய்து கொண்டு இருந்தார்கள்.
செல்லாவை எழுப்பினேன். இருவரும் மறைந்து மறைந்து மரச் சந்தில் நின்றோம். நிச்சயமாக அவர்கள் நல்ல காரியம் செய்யவில்லை என்பது புரிந்தது.

“இதெல்லாம் தேவையா நாம ஓடிப் போய்டலாம்.” செல்லா.

நான் மெதுவா, “ஒரே ஒரு போட்டோ எடுத்துவிடலாம்” என்று கிசுகிசுத்தேன்.

“மகனே மாட்டினா கைமாதான். அவனுங்க எதை வேணுமானாலும் செய்வான்க. இது வம்பிலதான் முடியும். ஒழுங்கா நான் சொன்னமாதிரி வந்துவிடு. வீண் பிரச்சனை நமக்கு வேண்டாம்.”

“இங்கே இருந்தே ஒண்ணே ஒண்ணு.”

மரத்தின் மறைவில் 20 அடி தூரத்தில் நெருங்கிவிட்டோம்.
இருவருக்கும் மூச்சு வாங்கியது. உத்துப் பார்த்தேன். சந்தேகித்தது போலவே பிணம்தான்.
யாரையோ கொலை செய்துகொண்டு வந்து அதை இங்குவைத்து புதைக்கிறார்கள் என்பது எளிதாக புரிந்துவிட்டது.வேக வேகமாய் குழிதோண்டிக் கொண்டு இருந்தார்கள்.
தரையோடு தரையாக படுத்து ஊர்ந்து போகஸ் செய்தேன். செல்லா என்னையும் அவர்களையும் கண்காணித்தபடி இருந்தான்.
எனக்கு கை எல்லாம் பரபரத்தது. நாளை இந்த போட்டோ போதும். மக்களே உங்களை ஜெயிலில் களித்தின்ன வைக்க என்று நினைத்துக்கொண்டேன்.
ஒருவன் ஓங்கி தரையில் கடப்பாரையை இறக்கினான். குழிபோதுமா என்று சைகை காட்டினான். ஒருவருக்கொருவர் பேசாமலேயே இருந்தனர்.
மற்றொருவன் குழியில் இறங்கினான்.அவனுக்கும் நெஞ்சுவரை வந்தது. மேலே ஏறிவந்து பிணத்தை கைத்தாங்கலாக தூக்கிகொண்டு இறக்கும் நேரத்தில் சரியாக படத்தை எடுத்தேன்.

க்ளிக்…! சின்ன சத்தம் வந்தது. அந்த சத்தம் அவர்களுக்கு கேட்டுவிட்டது.
அனைவரும் என்ன சத்தம் என்பதுபோல பார்த்தனர். சுற்றுமுற்றும் ஒரு பார்வையால அளந்துவிட்டு நடுகாட்ல எவண்டா வரபோறான் என்ற மிதப்பில் மீண்டும் வேலையில் மூழ்கினர்.

நான் மெதுவாக திரும்பி மறைந்து மறைந்து எழுந்தேன்.
திடீரென்று காட்டுக் கத்தலாய் ஒரு குரல் என்னை தூக்கிப் போட்டது.

“ஏய்…! அங்கே பாருடா!! ஒருத்தன் மறைஞ்சிருக்கான்…..”

“செல்லா ஓடு! வேகமாய் ஓடு…..!!”

நானும் செல்லாவும் உயிர்தெறிக்க ஓடினோம். செல்லா கட்டையாக இருப்பதானாலோ என்னவோ காட்டுதனமாய் ஓடி, எனக்கு முன்னே சென்று கொண்டு இருந்தான்.
எனக்கு மூச்சு வாங்கியது. கண்கள் மசமசக்க ஓடின்னேன்.எனக்கு பின்னே துரத்திக் கொண்டு வந்து இருந்தனர். அவர்களுகும் எனக்குமான இடைவெளி குறைவாகிக் கொண்டே வந்தது.
“ஐயோ! அம்மா” என்று குரல் ஒன்று கேட்க, அது செல்வாதானோ என நினைத்துத் திரும்ப, ஒரு மர வேர்பட்டு தடுக்கித் தலை குப்புற விழுந்தேன்.
என்னால் எழ முடியவில்லை. என்னை சுற்றி வளைத்து நாலைந்து பேர் கையில் ஆயுதங்களுடன் இருந்தனர்.

“யாருடா நீ..? எங்களை எதுக்கு படம் எடுத்தெ பொறம்போக்கு நாயே..” என்று பேசியவாறே என் முகத்தில் எட்டி உதைத்தான் ஒருவன்.
என் மூக்கில் அவன் கால் வேகமாகப் பட்டுச் சதை பிய்ந்து எரிந்தது. ரத்தச் சேறானது முகம்.

“எங்கடா கேமிரா?” என் பாக்கெட்டில் கைவிட்டு மொபைலை எடுத்து தரையில் கல்போட்டு சிதறவைத்தார்கள்.
“இந்த சனியந்தானா அது..”

“இவனை இப்படியே விட்டுட்டா நாளை நம்மை தேடி காட்டிக்கொடுப்பான். இன்னிக்கே இந்த பிரச்சனைய முடிச்சிடலாம். தலைக்கு மேல் பிரச்சனை ஆகிடுச்சு. வேற வழியில்லை.” என்று ஒருவன் கூற.என்னால் ஏதும் பேசமுடியாத நிலையில் மயக்கமடைந்து இருந்தேன்.
மறுக்ககூட முடியாத அளவு என் நிலை இருந்தது. ஆனால் அவர்கள் பேசுவதுமட்டும் என் காதில் கேட்டுக் கொண்டு இருந்தது. ஏதோ ஆபத்தில் மாட்டிக் கொண்டோம் என்று மட்டும் புரிந்தது.
என் கதை இன்னிக்கு முடியபோகுது என்று உள் மனம் சொல்லியது.

சிறிதி கண் விழித்துப் பார்க்க, இடப்பக்கம் இருந்தவன் யோசிக்காமல் என் நெஞ்சில் கடபபாரையை வேகமாக இறக்கினான்.
அதைத் தொடர்ந்து அடியாள்களின் கொள்கைபடி அனைவரும் என்னை மாற்மாறி…

‘ஹஹ்..’ என் நெஞ்சு விம்பி தானாகவே எகிறியது. என்னையுமறியாமலேயே சிறுநீரும், மலமும் வெளியேறிக் கொண்டு இருந்தது.
கண்கள் குளமாகி தலையே மேலே தூக்கி கடைசி உயிர்சுவாசம் இழுத்து என் மூச்சை மெல்ல அடக்கினேன்.

அப்போது எனக்கு அந்த சலசலப்பு தெளிவாகக் கேட்டது.மனதில் திடுக்கென்று ஏதோ கவ்விக் கொண்டது. செல்லாவைப் பார்த்தேன்.நல்லா தூங்கிக் கொண்டு இருந்தான். நான் நகர்ந்து என்ன என்று நாற்புறமும் கண்களை அலைய விட்டேன். ஒரு 50 அடித் தொலைவில் ஒரு பத்துப் பேர் சுற்றி நின்று கொண்டு எதையோ செய்து கொண்டு இருந்தார்கள். செல்லாவை எழுப்பினேன். இருவரும் மறைந்து மறைந்து மரம் சந்தில் நின்றோம். நிச்சயமாக அவர்கள் நல்ல காரியம் செய்யவில்லை என்பது புரிந்தது.

“குட்டி.. நமக்கு இங்கிருந்தா பிரச்சனை. சீக்கிரம் இடத்தை காலிப்பண்ணிடுவோம்.” செல்லா.

நான் மெதுவா, “ஒரே ஒரு போட்டோ எடுத்துவிடலாம இதுமாதிரி இடம்னு நான் கற்பனைகூட பண்ணல செல்லா.” என்று மெல்ல சொன்னேன்.

“மாட்டினா கைமாதான். அவனுங்க எதை வேணுமானாலும் செய்வான்க. இது வம்பிலதான் முடியும். வீண்பிரச்சனை மாட்டிக்க வேண்டாம் குட்டி. நாம் இங்கிருந்து சீக்கிரமா போய்டறது நல்லது.”

காற்று வேகமாக அடித்தது. எங்கிருந்தோ குரைத்தது நாய். காற்றின் ஆக்ரோசமான ஓட்டத்தில் மர இலைகளின் உடைந்த சப்தமும் பலவிதமான இரைச்சல்களில் வனம் ஆழ்ந்திருந்தது. காற்றினோடு நான் செல்லாவின் காதில் “இங்கே இருந்தே ஒண்ணே ஒண்ணு.” என்று நான் சொல்லி அவர்களை நோக்கி மறைந்து மறைந்து செல்ல ஆரம்பித்தேன். மரத்தின் மறைவில் 20 அடி தூரத்தில் நெருங்கிவிட்டோம்.
இருவருக்கும் மூச்சு வாங்கியது. உத்துப் பார்த்தேன். சந்தேகித்தது போலவே பிணம்தான்.
யாரையோ கொலை செய்துகொண்டு வந்து அதை இங்குவைத்து புதைக்கிறார்கள் என்பது எளிதாக புரிந்துவிட்டது.வேக வேகமாய் குழிதோண்டிக் கொண்டு இருந்தார்கள்.

திடீரென செல்லா ‘குட்டி அங்கே பார்!’ என வீரிட்டுக் கத்தினான்.நான் “உஷ்….! கத்தாதே அவர்களுக்குக் கேட்டுவிடும்” என்றபடி அங்கே பார்த்தேன்.செல்லா கத்தியது அவர்களுக்குக் கேட்டது போலத் தெரியவில்லை.ஆனால் அவர்களது கையில் இருந்த பிணத்தை அப்போதுதான் பார்த்தேன்.

அது……! செல்லா. ரத்தம் வழிந்தபடி செல்லாவின் உடல் தரையில் கோரமாக இருந்தது.

பயத்தில் உறைந்து போன நான் செல்லாவின் பக்கம் திரும்ப, அவன் மீண்டும் அலறினான். “குட்டி, என்னடா நடக்கிது இங்க”அவன் காட்டிய திசையில் நான் பார்த்தேன்.அங்கே…!

மரத்தின் கீழ் சாத்திய நிலையில், முகம் முழுவதும் இரத்தம் வழிந்தபடி எனது உடல் கிடந்தது.

வீல்……. என்று அலறியபடி செல்லாவின் மேல் மயக்கமாய்ச் சாய்ந்தேன்.

4 comments செப்டம்பர் 4, 2007

சாட்சாத் நம்ம நேரு மாமாவேதான்..

11779075171.jpg

இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா.. :P

1 comment ஆகஸ்ட் 10, 2007

நச்சென்று ஒரு ‘பட்டறை’

வழக்கமாக இரவு லேட்டாக தூங்கி பழகிய நான் நேற்று 11 மணிக்கே தூங்கபோனேன்.. காரணம் சீக்கிரம் வலைப்பூ பட்டறைக்கு போகவேண்டும் என்ற எண்ணம்தான். ஒருவழியாக விரைவாகவே வந்துவிட்டேன்.. நான் வந்த வேளையில் ஒருசிலர்தான்.

இதுவரை வலைப்பூ பதிவர்களில் லக்கி, பாலா அண்ணா தவிர யாரும் தெரியாது. பெரும்பாலும் போட்டோகளில் பாத்திருப்பதுதான். சிலரை கண்டுக்கொண்டேன். பலர் புதுமுகங்கள். எல்லோரிர்டமும் இருந்த முக்க்கிய விடயம் அனைவருமே விழுந்தடித்துக்கொண்டு வேலை செய்ததுதான். எவருமே ஏனோ தானோ இருந்ததாக நான் கவனிக்கவில்லை. உண்மையில் பெருமையாகதான் இருக்கிறது.

நான், இவான் மற்றும் ராஜா ஆகியோர் வரவெற்பு கூடவே வருகைதரும் பதிவர்களின் விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்யும் வேலையை செய்தோம். இதனால் ஒரு சின்ன லாபம் எனக்கு. யார் யார் என்று இலகுவாக் அடையாளம் காண முடிந்தது…:)

கலக்கல்கன்னியப்பன்களாகவந்த சேர்ந்த வாவாசங்கம் என் வாயை பிளக்க வைத்தார்கள்.. அடபாவிகளா.. என்னய்யா நடக்குது ஊருக்குள்ள..அதிருதுல்ல என்று சொல்லாதுதான் பாக்கி…

பொதுவாக நான் தீவிர வலைப்பதிவர் இல்லை. ஆனால் இவர்களை எல்லாம் கண்டபிறகு மனதில் ஒரு ஆசை வரத்தான் செய்கிறது. என்னுடைய பழைய பதிவுகளை திரும்பி பார்த்தால் ….:( பலர் சின்ன வயதில் பலர் கலக்கலாய் இருப்பது மகிழ்ச்சி..

டோண்டு சார் வந்தபோது ஏனோ மனதில் போண்டா பதிவு வந்து தொலைந்துவிட்டது.. என்ன கொடும சார் இது..?

மேலும்சென்னைபல்கலைக்கழகமாணவர்களும் இதில்ஆர்வமுடன்கலந்துகொண்டதுநல்லவிசயம்..வயதில் மூத்தவர்களும், இளைஞ இளைஞிகளும் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள்.. தமிழின் புதிய இணைய உலகம் மெல்ல விரிகிறது.. தமிழ் மெல்ல அழியும் என்ற பேச்சு எல்லாம் தேவையில்லாத பயம் போலதான் எனக்கு தோன்றுகிறது..

இக்கருத்தரங்கைவெற்றிகரமாகநடத்தியநண்பர்களுக்குவாழ்த்துக்கள்..

Add comment ஆகஸ்ட் 5, 2007

நான் ஏன் சீரியஸ் பதிவு போடவேண்டும்.?

நான் ஏன் சீரியஸ் பதிவு போடவேண்டும்..?

போட்டாலும் ஒருத்தரும் படிக்கிறதில்லை.ஜல்லி அடிச்சா மனசுக்கும் ஜாலியா இருக்கு.. எல்லோரும் கமெண்டும் அடிக்கிறாங்க. அதனால் இனி என் பணி ஜல்லி அடிச்சி கிடப்பதே(அட்லீஸ் கொஞ்ச காலத்துக்காகவது..) என்ன சொல்றீங்க பெரிசுங்களே..? :P

இங்க ரொம்ப பெரிய ஆளுங்களாம் இருக்காங்களாமே.. லக்கி, பாலா அண்ணா சொன்னாங்க.. சரி நைஸா கொஞ்ச நாள் கவனிச்சு அவ்ங்களையும் கலாய்க்க வேண்டியதுதான்..

இனிமே நானும் ஒரு அணி ஆரம்பிக்க போறேன். அது ஜல்லி அடிப்போர் முன்னேற்ற சங்கம். ஐடியா இருக்கிறவங்க அதுக்கு 100 ரூபா முதல்ல கட்டி அப்ளிகேஷன் வாங்குங்க..

அட .. எல்லோரும் ஓடிட்டிங்களா.. சரி சரி..

1 comment மே 7, 2007

முதல் அனுபவம்…!

என் முதல் அனுவபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.7.1985- அன்றுதான் நான் பள்ளியில் சேர்ந்த நாள்…நான் கொஞ்சம் லேட்டாக சேர்ந்தேன்…என்னையும் சேர்த்து ் மொத்தம் 9 பேர் இருந்தோம்.. ! அவர்கள் எல்லாம் எனக்கு முன்னாடியே செர்ந்துவிட்ட படியால் என்னை கவனிக்க்காது இருந்தனர். நான் ஒன்றும் சேர்ந்த்து கான்வென்ட் எல்லாம் இல்லை..ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி…ஆசிரியர் என்று பார்த்தால் 3 பேர் இருந்தனர்.. சத்துணாவு ஆயா 2, சத்துணவு அமைப்பாளார் 1 என மொத்தம் 6 பேர்த்தான்.

என் அம்மா தான் என்னை கொண்டு விட வந்திருந்தார்..எனக்கு மதிய சாதமும், 50 பைசாவுக்கு மிட்டாயும் வாங்கி தந்தார்…எனக்கென்னவோ பள்ளி என்றாலே ஜாலியாக விளையாடலாம் என்றுதான் நினைத்து வந்தேன்..ஆனால அங்கு வந்த பின் தான் தெரிந்த்து வாத்தியார்கள் குச்சியால் விரட்டுவதை..!

என அம்மா என்னை விட்டு போகும் வரை எனக்கு ஏதும் தெரியவில்லை..சிறிது நேரத்தில் கொஞ்சமாக தொடங்கிய எனது அழுகை ஒப்பாரியாக மாறியது..! அப்பொது ஒரு வாத்தியார் பிரம்புடன் வேகமாக என்னை அடிக்கிற மாதிரி வந்தார்..பயந்து போன ஓ வென்று கத்திகொண்டே தரை ‘ஈர’மாக்கி விட்டேன்..!!

-இதுதான் எனது முதல் அனுபவம்.. :) :)

Add comment மே 7, 2007

லக்கியும் பாலபாரதியும் அடித்த கும்மி

இது பொய் இல்லங்க…! சரியாக கொஞ்சம் நேரம் முன்னர் (4.4.200 8.20 PM) நண்பர் பாலபாரதியும் , லக்கியானந்தாவும் வந்து இருந்தார்கள்..! நிஜமாக மனசுக்கு இதமான சந்திப்பு.. கொஞ்ச நேரம்தான். லக்கி எனக்கு பழைய நெருங்கிய நண்பர். அவர் பட்டாசு..! வெடிவெடியா போடுவார். எனக்கு பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்தியவர் நண்பர் லக்கி.

பாலபாரதியைப்பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்.! நண்பர் தமிழ் எழுத்துருக்கள், டிஸ்பிளே ப்ராப்ளம் என்று எலலவற்றிலும் பட்டையை கிளப்புகிறார். நான் இந்த தமிழ் விசயங்களில் லக்கியைப்போலவே (அப்ப்பாடா வாரியாச்சு..:) ) கொஞ்சம் வீக்..! ஈ- கலப்பை, பேய்கலப்பை என்று கலந்துகட்டி அடித்தார்.! பாலபாரதிக்கு நன்றி..! ( பாலபாரதி மொட்டை அடிச்சிருக்கார்.. எந்த கோயிலுக்காம்..? :P )

பெரியார் படம்பற்றி ரொம்ப பேசினோம்… அட போங்க. இருந்த ஒரு மணிநேரத்தில் இணைய தமிழ் உலகை ஒரு வலம் வந்தோங்க..! வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது – இதுமாதிரி புதிய விசயஞானமுள்ள நண்பர்கள் கிடைப்பதால்..!

நண்பர்களின் வரவுக்கு மிக்க நன்றி..!

Add comment மே 3, 2007

சீதாம்மா வயது 67

தெருவை பார்க்கிறேன்
வெறிசசோடி சத்தமின்றி இருக்கிறது
தொலைவில் போகும் வாகனங்களின்
எச்சில் சத்தங்கள் என் காதுகளை வந்தடைகிறது
எதற்கோ அழும் பக்கத்துவீட்டு குழந்தையின்
அழுகை ரீங்காரம் என் காதுகளை சுவைக்கிறது
என் பேரப்பிள்ளையும் இப்படிதான் அழுவானோ
கைத்தொட்டு பார்க்க ஆசைவந்தது
காலையில் பார்த்த அவனின் புகைப்படங்கள்
கள்ளங்கபடமில்லாத சிரிப்பில் என்னை மூழ்கடித்தேன்
கண்ணை மூடிக்கொண்டு
என் வீட்டு மரத்தடியில் நாற்காலியில் நான்
பறவைகளின் எச்சங்கள் என் தலையில் விழுமோ
என்ற கவலையில் மரங்களை பார்கிறேன்
அவைகள் இல்லை
இரைத்தேடி சென்றிருக்ககூடும்
என் மகன் மனதில் ஓடினான்
மனதில் பாரம் பரவுகிறது
அனைவரையும் இழந்து விட்டேனோ
‘உங்களை எல்லாம் விட்டுட்டு நான் அமெரிக்கா ஏம்மா போகனும்’
கேட்ட மகனுக்கு
வாழ்க்கை வகுப்பை தவறாக எடுத்த என் கணவர்
பணத்தைப்பற்றிய நினைப்பில் எதிர்க்காலத்தை
அடகு வைத்த என் கணவர் மீது இறந்தும் கோபம் தீரவில்லை
அவருக்கென்ன
இருந்தவரை வேலைக்காரியாய் நான் இருந்தேன்
உறவுகளை எல்லாம் ஒட்டவைக்காமல் இருக்கவைத்தார்
அவரை மரணம் கொன்றபிறகு அனாதையாக
‘சீதாம்மாவுக்கு என்னப்பா. மகன் லட்சம் லட்சமா அனுப்புறான்’
சிரிப்புதான் வருகிறது
‘இல்லம்மா என் மனைவிக்கும் உனக்கும் ஒத்துவராது.
உனக்கு நாந்தான் பணம் அனுப்புறேனே..’
களையும் உறவுகள்
நான் என் மகனுக்கு எடையாகிபோனேன்
கண்களில் கண்ணீர் சட்டென திரண்டது
உயிர்பிரியும் காலத்தில் பணமென்னடா பணம்
தாரைதாரையும் வழியும் நீரை துடைத்துக்கொள்கிறேன்
என் அருகினில் வந்து நிற்கும் டைகரை பார்கிறேன்
நாயை நாய் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை
தலையை தடவிகொடுக்க
மெல்லமாய் மூச்சுவாங்கி
செல்ல சிணுங்கல் சிணுங்கி
மடியில் புதைகிறது

என் வாழ்க்கை நாடகம் நாயுடன் முடியுமோ..
நாயானாலும் என் பிள்ளைப்போல உணர்கிறேன்


1 comment மே 2, 2007

ஒளியின் வேகத்தை கண்டுபிடிக்க…

உண்மையில் ஒளியின் வேகத்தை கண்டுபிடிக்க வல்லுநர்கள் அரும் பாடுபட்டிருக்கின்றனர்.

17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தற்போது இருப்பதை விட வெகு வித்யாசமாக இருந்தது. ஒளிக்கு வேகம் எல்லாம் இல்லை, ஒளி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு நேரமே தேவை இல்லை, உடனடியாக சென்று இலக்கை அடைந்து விடுகிறது என்பது தான் அன்றைய அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது.

ஆனால் கலிலியோ என்ற விஞ்ஞானி மட்டும் ஒளிக்கு வேகம் இருக்கிறது என்று உறுதியாக நம்பினார். ஒளியின் வேகத்தை அளக்க ஒரு எளிய சோதனையையும் செட் பண்ணினார்.

இது தான் அவர் ஸ்ட்ராடெஜி: மலை உச்சியில் அவர் நின்றுக்கொண்டு ஒரு விளக்கை பிராயோகிப்பார், மலைக்கு கிழே இருக்கும் அவர் உதவியாளர் விளக்கு வெளிச்சத்தை பார்த்தவுடன் பதில் சிக்னல் அவருடைய விளக்கில் இருந்து தர வேண்டும். இவர்கள் இப்படி மாற்றி மாற்றி கொடுத்துக்கொள்ளும் சிக்னலில் ஒளியின் பயண நேரத்தை அறிந்துக்கொள்வார்கள்.

பிறகு ஒளி பயணம் செய்த தூரத்தையும் கணக்கிட்டு,

Distance = time * speed,

so, speed = Distance / time.

என்ற அறிவியல் விதியைக்கொண்டு கணக்கிடுவார்கள். இந்த முறை வெற்றி அடையவில்லை, ஏனெறால் மலை உச்சியில் இருந்து மலை அடிவாரத்துக்கு(ஒரு உதாரணத்துக்கு 1 மைல் என்று வைத்துக்கொள்ளலாம்) ஒளி 0.000005 நொடிகளில் பயணித்துவிடும். கலிலியோ காலத்தில் அந்த குறுகிய நேரத்தை கணக்கிட அவரிடம் போதிய வசதி இல்லை. ஆனால் கலிலியோவின் ஸ்ரேடெஜியில் பிழை ஒன்றும் இல்லை, அவர் சொல்லியபடியே ஒளியின் வேகத்தை கண்டுபிடிக்கலாம்- ஆனால் அதற்கு பல லட்ச்சக்கணக்கான மைல் தூரம் தேவை.

1670களில் ஒலே ரோமெர் என்ற விஞ்ஞானி(ஆஸ்ட்ரானமர்), ஜூப்பிடர் கிரகத்தின் நிலவான அயோவை படித்துக்கொண்டிருந்தார். அயோ, ஜுப்பிடரை 1.76 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வரும். அப்படி சுற்றி வரும் ஜுப்பிடரின் நிலவு, தான் தோன்ற வேண்டிய இடத்தில் தோன்றாததை ஒலே கண்டு வியந்தார். அயோ ஏன் அந்த இடத்தில் இல்லை என்பதற்கு ஒரு பாஸிபிள் விளக்கம் தேவை அல்லவா? இதற்கு ஒரே ஒரு விளக்கம் தான் இருந்தது- அது ஒளியின் வேகம். ஜூப்பிட்டர் பூமிக்கு பக்கத்தில் இருந்த போது அயோவின் ஒளி சீக்கிரமாக நம்மை வந்தடைகிறது, அதே போல ஜூப்பிட்டர் பூமியை விட்டு தள்ளி இருக்கும் போது, அயோவின் ஒளி நம்மை வந்தடைய நேரமாகிறது. ஆகவே ஒளிக்கு வேகம் இருக்கிறது என்பது திட்டவட்டமாக அறியப்பட்டது. பூமிக்கும், ஜூப்பிட்டருக்கும் உள்ள தூரத்தை வைத்து ஒலே ஒளியின் வேகத்தை கண்டுபிடித்தார், மேஜிக் நம்பர் 186,000 miles/second, அல்லது 300,000 km/ second.

இன்றைய காலக்கட்டத்தில் ஒளியின் வேகத்தை துல்லியமாக அறிய பல கருவிகள் உண்டு. விஞ்ஞானிகள் நிலவின் பாறை மீது ஒரு கண்ணாடியை பொருத்தி இருக்கின்றனர். இங்கிருந்து ஒரு லேசர் சிக்னலை அனுப்பினால் அது திரும்ப வர 2.5 செகெண்டுகள் பிடிக்கிறது.

நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் = Distance(x km)

நிலவுக்கும் பூமிக்கும் இடையே ஒளி பயணம் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் = Time (2.5 sec)

ஒளியின் வேகம், Speed = distance(x)/ (2.5 sec)

இதை நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால் கலிலியோவின் மலை உச்சி சோதனைக்கும், இதற்கும் அதிக வித்யாசம் இல்லை biggrin.gif

எழுதியவர் : பேய்குட்டி

Add comment மே 1, 2007

படவிமர்சனம், Blood Diamond

ஒரே வரியில் சொல்வதென்றால், அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான படம். இந்த கதையில் தனியாக ஹீரோ என்று யாரும் கிடையாது, படக்கதை தான் ஹீரோ. வைரம் என்ற ஒரு கல், எத்தனை உயிர்களை பலி வாங்குகிறது என்று இதை விட அழகாக யாராலும் சொல்ல முடியாது.ஆப்ரிக்காவில் உள்ள ஒரு எளிய குடும்பத்தை காட்டுவதில் கதை தொடங்குகிறது, தன் மகனை சாலமன் வேண்டி(Djimon Hounsou) பள்ளிக்கு கூட்டி போக எழுப்புகிறார். போகும் வழியில் வைரக்கடத்தல் மாபியாவிடம் பிடிபடுகிறார்.

சாலமன் குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்டு வைரம் எடுக்கும் கடினமான வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார், அங்கே வைரத்துக்காக ஆப்ரிக்கர்கள், ஆப்ரிகர்களாலேயே கொடுமைபடுத்தப்பட்டு கொல்லப்படுவதை நேரில் பார்க்கிறார். அவருக்கும் ஒரு அதிர்ஷ்டம் அடிக்கிறது, விலை மதிக்க முடியாத பிங்க் வைரம் கையில் கிடைக்கிறது- அதே சமயத்தில் வைரத்தை சட்ட விரோதமாக அறுவடை செய்வதை தடுக்கும் அரசு ராணுவத்தினர் வருவதினால் அங்கு வேலை பார்க்கும் அனைவரும் தப்பி ஓடுகின்றனர். உயிர் தப்பிக்க ஓடும் சாலமன்
தன் வைரத்தை ஒரு இடத்தில் புதைக்கிறார். இந்தக்கணத்திலிருந்து கதை வைரத்தை சுற்றி தவழ்கிறது. சாலமன் வைரத்தை புதைப்பதை ஒரு ஆப்ரிக்க மாபியா தலைவர் பார்த்துவிடுகிறார். அவர் மூலமாக சாலமனிடம் வைரம் இருப்பது ஒரு வதந்தி போல அனைவரிடமும் பரவுகிறது. அந்த வைரத்தை டானி ஆர்ச்சர்(Leonardo DiCaprio) கைப்பற்ற முனைகிறார்.

டானிக்கு ஒரு பெண் அமரிக்க நிருபர், மேடி(Jennifer Connelly), அறிமுகமாகிறார். டானியிடமிருந்து கடத்தல் ரகசியங்களை அறிய நினைக்கிறார். டானிக்கு மேடியை பிடித்திருந்தாலும் அவர் நிருபர் என்பதால் விலக நினைக்கிறார். சாலமனின் வைரத்தை கைப்பற்ற நினைக்கும் டானி சாலமனுடன் பேரம் பேசுகிறார். வைரத்துக்கு சாலமன் பேசும் விலை- சாலமனின் குடும்பம். தன்னுடைய குடும்பத்தை கண்டுபிடித்துக்கொடுத்தால் அந்த வைரத்தை கொடுத்துவிடுவதாக சாலமன் கூறுகிறார். சாலமனின் குடும்பத்தை ஒரு அகதிகள் விடுதியில் மேடியின் உதவியால் கண்டுபிடிக்கிறார்கள். சாலமனுடைய மகனை மட்டும் காணவில்லை, மகனை வைரக்கடத்தல் மாபியா பிடித்துக்கொண்டு போனதாக சாலமனின் மனைவி தெரிவிக்கிறார். சாலமனின் மகனை தேடி பயணம் தொடர்கிறது. கடைசியில் சாலமனின் மகனை ஒரு மாபியா கூட்டதில் கண்டுபிடிக்கிறார்கள். சாலமனின் மகன் கெட்ட ஆப்ரிக்க தலைவனால் மூளை சலவை செயப்பட்டதால் தந்தையுடன் வர மறுக்கிறார். மகனிடம் உருக்கமாக பேசும் சாலமன், மகன் மனதை மாற்றி தன்னுடைய வைரத்தின் உதவியால் எப்படி தன் குடும்பத்தோடு இணைந்து வைரக்கொள்ளையர்களையும் காட்டிக்கொடுக்கிறார் என்பது மீதிக்கதை.

கதையில் மிகவும் கவர்வது, முகத்தில் அறையும் உண்மை. ஒரு வைரத்தில் எத்தனை ஆப்ரிக்க சிறுவர்களின் இரத்தம் இருக்கிறது என்ற உண்மையை ஜீரனிக்கவே முடியவில்லை. ஆப்ரிக்க மாபியாக்களுக்கு ஆயுதத்தை சப்ளை செய்யும் மேல் நாட்டினர், எப்படி உள்நாட்டில் கலகத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் வைரக்கடத்தலில் பணம் சம்பாதிக்கிறார்கள், ஒரு மனிதர் மேல் மற்றொரு மனிதர் கொஞ்சம் கூட இரக்கம் காட்டுவதில்லை, பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற உறைய வைக்கும் உண்மையை அழகாக காண்பிக்கிறார்கள்.

படத்தின் ஸ்டார் டிகாப்ரியோ தான். டைடானிக் படத்தில் சாக்லெட் ஹீரோவாக வந்த ஜாக் டாஸனா இது என்று ஆச்சரியப்பட வைக்கிறார். அற்புதமான நடிப்பு, முரட்டுத்தனமான தோறம், தென் ஆப்ரிக்க ஆங்கில உச்சரிப்பு. அசல் தன் ஆப்ரிக்க வெள்ளையரை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். மேலும் வைரக்கடத்தல்காரர் + முன்னாள் இராணுவ வீரர் எனப்தால் உடல் வலுவில் அக்கறை செலுத்தி உடலை கூட அதற்கு ஏற்றது மாதிரி செதுக்கி இருக்கிறார்.

படத்தின் அடுத்த ஸ்டார் சாலமன், அவருடைய ஆப்ரிக்க முக அமைப்பு கோபம், இயலாமை, பழி உணர்ச்சி, கவலை, அழுகை, சந்தோஷம் போன்ற அத்தனை உணர்ச்சிகளையும் தெளிவாக காட்டுகிறது.

அடுத்ததாக ஜெனிப்பர், அழகான புத்திசாலி ஜர்னலிஸ்ட். கொடுக்கப்பட்ட வேலையை திறம் பட செய்திருக்கிறார். அவரை எல்லாம் பார்க்கும் போதும் வெறும் தலையை காட்டி, 4 பாட்டுக்கு நடனம் ஆடி, கவர்ச்சி காட்டி விட்டு காணாமல் போகும் நம் உள்ளூர் நடிகைகளில் பரிதாபமான நிலை மனதுக்குள் நிழலாடியது.

இதற்கு நான் நேரம் எடுத்து விமர்சனம் எழுதக்காரணம், அனைவரும் இந்த படத்தை ஒரு தரமாவது பார்த்து வைரம் உபயொகித்தலை விட்டு விட வேண்டும் என்று தான். இந்த கடத்தல் வைரங்கள், இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு, நல்ல வைரங்களோடு கலக்கப்பட்டு வெளி நாட்டு மார்க்கெட்டில் விடப்படுகிறது. எனவே ஆப்ரிக்காவில் சிந்தும் இரத்த துளிகள், இந்தியாவின் மீதும் தெறிக்கிறது. இதில் நல்ல வைரமும்(நேர்மையான வழியில் வாங்கிய வைரம்) இருக்கிறது ஆனால் இரண்டும் கலக்கப்படுவதால் கண்டுபிடித்தல் கடினம். அடுத்த முறை வைரம் வாங்க ஆசை ஆசையாக கடைக்கும் போகும் முன் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது, இத்தனை மனித உயிர்களை சித்தரவதை செய்து கொல்லப்பட்டு உருவான வைரம் நமக்கு தேவை தானா?

நன்றி : பேய்குட்டி

Add comment ஏப்ரல் 25, 2007

Next Posts Previous Posts


 

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« டிச    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

அண்மைய இடுகைகள்