சிறகில்லாத சிட்டுக்குருவிகள்

ஏப்ரல் 25, 2007 at 9:31 முப 1 மறுமொழி

சிட்டுக்குருவி பார்த்து இருக்கிறீர்களா..? சின்னதாய் சின்ன மூக்கோடு கைக்குள் அடங்கும்போல இருக்கும். கிளிப்போன்று அழகான பறவை என்று சொல்லமுடியாவிட்டாலும் அதன் கீச்கீச் சத்தமும், துள்ளல்களும் நம்மை அதன் பக்கம் திரும்பவைக்கும்.. பொதுவாக சிட்டுக்குருவிகள் கிணற்றின் உள்ளே இருக்கும் சில கிளைகளிலும், மின்சார கம்பங்களிலும் கூடுகட்டி வாழ்ந்து வந்துக்கொண்டு இருந்தது.. இங்கே இருந்தது என்றால் இப்ப எங்கே என்கிறீர்களா..? அதுதான் என் கேள்வியே..?

நம் இயந்திர வாழ்க்கையில் நாம் தொலைக்கும் விசயங்கள் பல. அவற்றில் முக்கியமானது இயற்கையை சீண்டுவதுதான். மரங்களை வெட்டுகிறோம்..ஓயாத கண்டுபிடிப்புகள்..எல்லாம் இயற்கையை பாழ் செய்வது ஏனோ நம் கண்களுக்கு புலப்படுவது இல்லை.. வேண்டுமானால் நம் சந்ததியினரும் பிந்தொடரும் சில சந்ததியினரும் சுகமாய் அனுபவிக்கலாம். ஆனால் எதிர்கால மனிதர்கள் நம்மை எல்லாம் ஒரு அறிவில்லாத மூடர்களாகவே பார்பார்கள் என்பது மட்டும் நிஜம்..

சரி என்னவோ பேசபோக தலைப்பு திசைமாறுது பாருங்க..

சிலவருடங்கள் முன்பு கிராமங்களில் கூடுகட்டி வாழ்ந்துவந்த சிட்டுக்குருவிகள் இன்று அம்பேல். ஆசைக்குகூட ஒன்றும் பார்க்கமுடிவதில்லை. எங்கே போனது அவை எல்லாம்..? பாதி சிறுவர்களால் சூறையாடப்பட்டு கொன்று தின்றுவிட்டனர்.. இன்னொருப்பக்கம் சிட்டுகுருவி லேகியம் என்று…. தேவையான உணவு, நீர், சூழ்நிலை பற்றாகுறையால் இயல்பாகவே அழிந்தது ஒருபுறம்..

இண்டர்நெட் புரட்சி, செவ்வாய்கிரகம் எட்டிவிட்டோம் என்ற கதைகளுக்கு மத்தியில் எதிர்கால பூமிக்கு ஆப்பு வைக்கிறோம் என்று உணர்கிறோமா..?

Entry filed under: இறந்தகாலம்.

வாரிசு அரசியல் சரிதானா..? படவிமர்சனம், Blood Diamond

1 பின்னூட்டம் Add your own

  • 1. johan paris  |  10:00 முப இல் ஓகஸ்ட் 7, 2007

    அன்பரே!
    சிட்டுக்குருவியும் ஓர் அழகான பறவை; கிளியில் ஆண் பெண் பேதம் இனம் காண்பது கடினம்; ஆனால் சிட்டுக்குருவி தனித்துவமான நிறச் சேர்வை கொண்டது.
    அத்துடன் பொந்தில் வாழ்வது; நான் மின்சாரக்கம்பம்,மரக்கிளையில் கூடுகட்டக் காணவில்லை. இதன் இயற்கை எதிரி காகம் ,இதனிடமிருந்து குஞ்சைக் காக்க இது பொந்தில் கூடுகட்டும்.
    அத்துடன் இதை வீட்டில் அனுசரிக்கும் பழக்கம் உண்டு . அதனால் ஓட்டைப்பானை சுவரில் வைத்துவிடுவார்கள்.
    குருவி வீட்டில் வாழ்வது ராசியானதெனும் நம்பிக்கை ஆசியர்கள் மத்தியில் உண்டு.
    இன்றைய தானியங்களில் பாச்சியுள்ல அதீத பூச்சிகொல்லி மனிதனை;நின்று கொல்லுகிறது. இந்தச் சிட்டுக்களை உடன் கொல்லுகிறது.
    அத்துடன் நகர் மயமாக்கல் எனும் போர்வையில் இயற்கைக்கு உலை வைத்துவிட்டோம்.
    நமது தலமுறைகள் படத்திதான் இந்தச் சிட்டுக்களைப் பார்க்கமுடியும் போல் உள்ளது.
    நாம் என்ன செய்யமுடியும்.
    பதிவில் ஒரு சிட்டுப் படம் போட்டு விடுங்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஏப்ரல் 2007
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

அண்மைய பதிவுகள்


%d bloggers like this: