Archive for மே, 2007

நான் ஏன் சீரியஸ் பதிவு போடவேண்டும்.?

நான் ஏன் சீரியஸ் பதிவு போடவேண்டும்..?

போட்டாலும் ஒருத்தரும் படிக்கிறதில்லை.ஜல்லி அடிச்சா மனசுக்கும் ஜாலியா இருக்கு.. எல்லோரும் கமெண்டும் அடிக்கிறாங்க. அதனால் இனி என் பணி ஜல்லி அடிச்சி கிடப்பதே(அட்லீஸ் கொஞ்ச காலத்துக்காகவது..) என்ன சொல்றீங்க பெரிசுங்களே..? 😛

இங்க ரொம்ப பெரிய ஆளுங்களாம் இருக்காங்களாமே.. லக்கி, பாலா அண்ணா சொன்னாங்க.. சரி நைஸா கொஞ்ச நாள் கவனிச்சு அவ்ங்களையும் கலாய்க்க வேண்டியதுதான்..

இனிமே நானும் ஒரு அணி ஆரம்பிக்க போறேன். அது ஜல்லி அடிப்போர் முன்னேற்ற சங்கம். ஐடியா இருக்கிறவங்க அதுக்கு 100 ரூபா முதல்ல கட்டி அப்ளிகேஷன் வாங்குங்க..

அட .. எல்லோரும் ஓடிட்டிங்களா.. சரி சரி..

மே 7, 2007 at 4:30 பிப 1 மறுமொழி

முதல் அனுபவம்…!

என் முதல் அனுவபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.7.1985- அன்றுதான் நான் பள்ளியில் சேர்ந்த நாள்…நான் கொஞ்சம் லேட்டாக சேர்ந்தேன்…என்னையும் சேர்த்து ் மொத்தம் 9 பேர் இருந்தோம்.. ! அவர்கள் எல்லாம் எனக்கு முன்னாடியே செர்ந்துவிட்ட படியால் என்னை கவனிக்க்காது இருந்தனர். நான் ஒன்றும் சேர்ந்த்து கான்வென்ட் எல்லாம் இல்லை..ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி…ஆசிரியர் என்று பார்த்தால் 3 பேர் இருந்தனர்.. சத்துணாவு ஆயா 2, சத்துணவு அமைப்பாளார் 1 என மொத்தம் 6 பேர்த்தான்.

என் அம்மா தான் என்னை கொண்டு விட வந்திருந்தார்..எனக்கு மதிய சாதமும், 50 பைசாவுக்கு மிட்டாயும் வாங்கி தந்தார்…எனக்கென்னவோ பள்ளி என்றாலே ஜாலியாக விளையாடலாம் என்றுதான் நினைத்து வந்தேன்..ஆனால அங்கு வந்த பின் தான் தெரிந்த்து வாத்தியார்கள் குச்சியால் விரட்டுவதை..!

என அம்மா என்னை விட்டு போகும் வரை எனக்கு ஏதும் தெரியவில்லை..சிறிது நேரத்தில் கொஞ்சமாக தொடங்கிய எனது அழுகை ஒப்பாரியாக மாறியது..! அப்பொது ஒரு வாத்தியார் பிரம்புடன் வேகமாக என்னை அடிக்கிற மாதிரி வந்தார்..பயந்து போன ஓ வென்று கத்திகொண்டே தரை ‘ஈர’மாக்கி விட்டேன்..!!

-இதுதான் எனது முதல் அனுபவம்.. :):)

மே 7, 2007 at 7:25 முப பின்னூட்டமொன்றை இடுக

லக்கியும் பாலபாரதியும் அடித்த கும்மி

இது பொய் இல்லங்க…! சரியாக கொஞ்சம் நேரம் முன்னர் (4.4.200 8.20 PM) நண்பர் பாலபாரதியும் , லக்கியானந்தாவும் வந்து இருந்தார்கள்..! நிஜமாக மனசுக்கு இதமான சந்திப்பு.. கொஞ்ச நேரம்தான். லக்கி எனக்கு பழைய நெருங்கிய நண்பர். அவர் பட்டாசு..! வெடிவெடியா போடுவார். எனக்கு பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்தியவர் நண்பர் லக்கி.

பாலபாரதியைப்பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்.! நண்பர் தமிழ் எழுத்துருக்கள், டிஸ்பிளே ப்ராப்ளம் என்று எலலவற்றிலும் பட்டையை கிளப்புகிறார். நான் இந்த தமிழ் விசயங்களில் லக்கியைப்போலவே (அப்ப்பாடா வாரியாச்சு..:) ) கொஞ்சம் வீக்..! ஈ- கலப்பை, பேய்கலப்பை என்று கலந்துகட்டி அடித்தார்.! பாலபாரதிக்கு நன்றி..! ( பாலபாரதி மொட்டை அடிச்சிருக்கார்.. எந்த கோயிலுக்காம்..? 😛 )

பெரியார் படம்பற்றி ரொம்ப பேசினோம்… அட போங்க. இருந்த ஒரு மணிநேரத்தில் இணைய தமிழ் உலகை ஒரு வலம் வந்தோங்க..! வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது – இதுமாதிரி புதிய விசயஞானமுள்ள நண்பர்கள் கிடைப்பதால்..!

நண்பர்களின் வரவுக்கு மிக்க நன்றி..!

மே 3, 2007 at 4:22 பிப பின்னூட்டமொன்றை இடுக

சீதாம்மா வயது 67

தெருவை பார்க்கிறேன்
வெறிசசோடி சத்தமின்றி இருக்கிறது
தொலைவில் போகும் வாகனங்களின்
எச்சில் சத்தங்கள் என் காதுகளை வந்தடைகிறது
எதற்கோ அழும் பக்கத்துவீட்டு குழந்தையின்
அழுகை ரீங்காரம் என் காதுகளை சுவைக்கிறது
என் பேரப்பிள்ளையும் இப்படிதான் அழுவானோ
கைத்தொட்டு பார்க்க ஆசைவந்தது
காலையில் பார்த்த அவனின் புகைப்படங்கள்
கள்ளங்கபடமில்லாத சிரிப்பில் என்னை மூழ்கடித்தேன்
கண்ணை மூடிக்கொண்டு
என் வீட்டு மரத்தடியில் நாற்காலியில் நான்
பறவைகளின் எச்சங்கள் என் தலையில் விழுமோ
என்ற கவலையில் மரங்களை பார்கிறேன்
அவைகள் இல்லை
இரைத்தேடி சென்றிருக்ககூடும்
என் மகன் மனதில் ஓடினான்
மனதில் பாரம் பரவுகிறது
அனைவரையும் இழந்து விட்டேனோ
‘உங்களை எல்லாம் விட்டுட்டு நான் அமெரிக்கா ஏம்மா போகனும்’
கேட்ட மகனுக்கு
வாழ்க்கை வகுப்பை தவறாக எடுத்த என் கணவர்
பணத்தைப்பற்றிய நினைப்பில் எதிர்க்காலத்தை
அடகு வைத்த என் கணவர் மீது இறந்தும் கோபம் தீரவில்லை
அவருக்கென்ன
இருந்தவரை வேலைக்காரியாய் நான் இருந்தேன்
உறவுகளை எல்லாம் ஒட்டவைக்காமல் இருக்கவைத்தார்
அவரை மரணம் கொன்றபிறகு அனாதையாக
‘சீதாம்மாவுக்கு என்னப்பா. மகன் லட்சம் லட்சமா அனுப்புறான்’
சிரிப்புதான் வருகிறது
‘இல்லம்மா என் மனைவிக்கும் உனக்கும் ஒத்துவராது.
உனக்கு நாந்தான் பணம் அனுப்புறேனே..’
களையும் உறவுகள்
நான் என் மகனுக்கு எடையாகிபோனேன்
கண்களில் கண்ணீர் சட்டென திரண்டது
உயிர்பிரியும் காலத்தில் பணமென்னடா பணம்
தாரைதாரையும் வழியும் நீரை துடைத்துக்கொள்கிறேன்
என் அருகினில் வந்து நிற்கும் டைகரை பார்கிறேன்
நாயை நாய் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை
தலையை தடவிகொடுக்க
மெல்லமாய் மூச்சுவாங்கி
செல்ல சிணுங்கல் சிணுங்கி
மடியில் புதைகிறது

என் வாழ்க்கை நாடகம் நாயுடன் முடியுமோ..
நாயானாலும் என் பிள்ளைப்போல உணர்கிறேன்


மே 2, 2007 at 10:03 முப 1 மறுமொழி

ஒளியின் வேகத்தை கண்டுபிடிக்க…

உண்மையில் ஒளியின் வேகத்தை கண்டுபிடிக்க வல்லுநர்கள் அரும் பாடுபட்டிருக்கின்றனர்.

17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தற்போது இருப்பதை விட வெகு வித்யாசமாக இருந்தது. ஒளிக்கு வேகம் எல்லாம் இல்லை, ஒளி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு நேரமே தேவை இல்லை, உடனடியாக சென்று இலக்கை அடைந்து விடுகிறது என்பது தான் அன்றைய அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது.

ஆனால் கலிலியோ என்ற விஞ்ஞானி மட்டும் ஒளிக்கு வேகம் இருக்கிறது என்று உறுதியாக நம்பினார். ஒளியின் வேகத்தை அளக்க ஒரு எளிய சோதனையையும் செட் பண்ணினார்.

இது தான் அவர் ஸ்ட்ராடெஜி: மலை உச்சியில் அவர் நின்றுக்கொண்டு ஒரு விளக்கை பிராயோகிப்பார், மலைக்கு கிழே இருக்கும் அவர் உதவியாளர் விளக்கு வெளிச்சத்தை பார்த்தவுடன் பதில் சிக்னல் அவருடைய விளக்கில் இருந்து தர வேண்டும். இவர்கள் இப்படி மாற்றி மாற்றி கொடுத்துக்கொள்ளும் சிக்னலில் ஒளியின் பயண நேரத்தை அறிந்துக்கொள்வார்கள்.

பிறகு ஒளி பயணம் செய்த தூரத்தையும் கணக்கிட்டு,

Distance = time * speed,

so, speed = Distance / time.

என்ற அறிவியல் விதியைக்கொண்டு கணக்கிடுவார்கள். இந்த முறை வெற்றி அடையவில்லை, ஏனெறால் மலை உச்சியில் இருந்து மலை அடிவாரத்துக்கு(ஒரு உதாரணத்துக்கு 1 மைல் என்று வைத்துக்கொள்ளலாம்) ஒளி 0.000005 நொடிகளில் பயணித்துவிடும். கலிலியோ காலத்தில் அந்த குறுகிய நேரத்தை கணக்கிட அவரிடம் போதிய வசதி இல்லை. ஆனால் கலிலியோவின் ஸ்ரேடெஜியில் பிழை ஒன்றும் இல்லை, அவர் சொல்லியபடியே ஒளியின் வேகத்தை கண்டுபிடிக்கலாம்- ஆனால் அதற்கு பல லட்ச்சக்கணக்கான மைல் தூரம் தேவை.

1670களில் ஒலே ரோமெர் என்ற விஞ்ஞானி(ஆஸ்ட்ரானமர்), ஜூப்பிடர் கிரகத்தின் நிலவான அயோவை படித்துக்கொண்டிருந்தார். அயோ, ஜுப்பிடரை 1.76 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வரும். அப்படி சுற்றி வரும் ஜுப்பிடரின் நிலவு, தான் தோன்ற வேண்டிய இடத்தில் தோன்றாததை ஒலே கண்டு வியந்தார். அயோ ஏன் அந்த இடத்தில் இல்லை என்பதற்கு ஒரு பாஸிபிள் விளக்கம் தேவை அல்லவா? இதற்கு ஒரே ஒரு விளக்கம் தான் இருந்தது- அது ஒளியின் வேகம். ஜூப்பிட்டர் பூமிக்கு பக்கத்தில் இருந்த போது அயோவின் ஒளி சீக்கிரமாக நம்மை வந்தடைகிறது, அதே போல ஜூப்பிட்டர் பூமியை விட்டு தள்ளி இருக்கும் போது, அயோவின் ஒளி நம்மை வந்தடைய நேரமாகிறது. ஆகவே ஒளிக்கு வேகம் இருக்கிறது என்பது திட்டவட்டமாக அறியப்பட்டது. பூமிக்கும், ஜூப்பிட்டருக்கும் உள்ள தூரத்தை வைத்து ஒலே ஒளியின் வேகத்தை கண்டுபிடித்தார், மேஜிக் நம்பர் 186,000 miles/second, அல்லது 300,000 km/ second.

இன்றைய காலக்கட்டத்தில் ஒளியின் வேகத்தை துல்லியமாக அறிய பல கருவிகள் உண்டு. விஞ்ஞானிகள் நிலவின் பாறை மீது ஒரு கண்ணாடியை பொருத்தி இருக்கின்றனர். இங்கிருந்து ஒரு லேசர் சிக்னலை அனுப்பினால் அது திரும்ப வர 2.5 செகெண்டுகள் பிடிக்கிறது.

நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் = Distance(x km)

நிலவுக்கும் பூமிக்கும் இடையே ஒளி பயணம் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் = Time (2.5 sec)

ஒளியின் வேகம், Speed = distance(x)/ (2.5 sec)

இதை நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால் கலிலியோவின் மலை உச்சி சோதனைக்கும், இதற்கும் அதிக வித்யாசம் இல்லை biggrin.gif

எழுதியவர் : பேய்குட்டி

மே 1, 2007 at 4:36 முப பின்னூட்டமொன்றை இடுக


மே 2007
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

அண்மைய பதிவுகள்