Archive for செப்ரெம்பர், 2007

Flock என்ற அற்புதமான உலாவி..

சமீபக்காலமாக நான் ப்லாக் என்ற உலாவியை உபயோகித்து வருகிறேன். இது 99 சதம் பயர்பாக்ஸை உல்டா செய்திருந்தாலும் பல புதிய விசயங்களும் சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு வெகுவாக பிடித்தும் இருக்கிறது.

உதாரணமாக நீங்கள் ஜிமெயில் ஒரு போட்டோவை சேர்க்க நினைத்தால் வழக்கமாக நாம் அட்டாச்செண்ட் என்னும் வழியில்தானே செய்ய இயலும். ஆனால் ப்ளாக் வெறும் ட்ராக் அண்ட் ட்ராப் மூலமாகவே இழுத்து வந்து சப்ஜெக்ட் காலமில் விட்டுவிடலாம். மேலும் ப்லாக் ப்ளிக்கர், போட்டோ பக்க்கெட் போன்ற தளங்களிலிருந்து எளிதாக படங்களை இணைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க்கிறது. அது மட்டுமல்ல. நமது வலைப்பூக்களில் பதிவிடவும் எளிதான முறைகளை  சுட்டுக்கிறது..

இது பயர்பாக்ஸின் அப்பட்டமான காப்பிதான்.  ஆனாலும் நல்லா நச்சுன்னு நமீதா மாதிரி இருக்கு.. மேலும் பயர்பாக்ஸின் ஆட் ஆன்களை இணைத்தும் கொள்ளலாம். குறிப்பாக அதன்  ஓவர் சீன் காட்டாத சிலவசதிகள் மற்றும் பயர்பாக்கிஸினை தொடர்ச்சியாக பார்ப்பதால் வரும் சின்ன அலுப்பு ஆகியவற்றை சற்று விட்டொழிய வரலாம்  ப்லாக்கிற்கு..

  பொட்டியில் உக்காரவைக்க..

செப்ரெம்பர் 30, 2007 at 6:41 முப 1 மறுமொழி

அப்பாவைப்பற்றிய சில நினைவுகள்..

என் அப்பாவை பற்றிய சில நினைவுகள்..:
——————–
என் அப்பா ஒரு பக்கா விவசாயி..வேட்டி பட்டாப்பட்டி டவுசர் என்று பக்கா கிராம வாசனையொடு வாழ்ந்தவர். படித்தது என்னவோ மூன்றாம் வகுப்புதான் என்றாலும் சுத்தமாக படிப்பார்.. ஆனால் எழுத்து சரிவராது.. பெரியார் கொள்கையை முழுமையாக அனுசரித்தவர். கலைஞர் என்றால் மிகுந்த பற்றும் நேசமும் கொண்டவராக இருந்தார். கடவுள் எதிர்ப்பில் முழு நம்பிக்கை கொண்டவர். நான் இன்று ஒருமாதிரி தெளிவாக இருக்க அப்பாவின் உந்துதலே காரணம். அவரின் பல குணங்களில் என்னில் பிரதிபலிக்கின்றன.
——————–
நாங்கள் சிறுப்பிள்ளைகளாக இருந்த சமயத்தில் மிக மிக வறுமையாக வாழ்ந்த காலக்கட்டதிலும புத்தகம் படிப்பதில் எங்களை அதிகம் ஊக்கமூட்டுவார். இன்று கூட ஒரு புத்தகம் வாங்கினால் நானோ எங்கக்காவோ பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைக்கூட மறந்துவிடுவோம். சின்ன வயதில் தொடங்கிய அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது விந்தைதான்.. வயசு ஏறினாலும் புத்தி மாறலியே நைனா..:(

——————–
என் தந்தை நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். சாதூர்தியமாக பேசும் குணம் கொண்டவர். எந்த சூழ்நிலையிலும் லாவகமாக பேசுவார். அவரின் பேச்சுக்கு பெருமைக்கு சொல்லவில்லை.நிஜமாகவே அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் இருந்தது.

——————–
நான் முன்பு ஒரு பதிவு போட்டேன் ‘ ஆண்கள் ஏன் தங்கள் பெண் குழந்தைகள் மேல் பற்றும் பாசமாக இருக்கிறார்கள் ‘ என்று.. எங்கப்பாவும் அதற்கு விதிவிலக்கல்ல.. அவரை வைத்துதான் அந்த திரியே… எனக்கு பைசாவே தரமாட்டார். அக்காவுக்கு மட்டும் ஸ்பெசலாக தந்து என் வயிற்றெரிச்சலை அப்பட்டமாக அள்ளிகொள்வார். laugh.gif
—————–
என் பொருளாதார வாழ்க்கை அம்மாவிடம் லவட்டுவதும் கொஞ்சம் திருடு என்றும் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தேன். ஒருநாள் ஒரு பாத்திரத்தில் அம்மா வைத்திருந்த பணத்தை நோண்டிக்கொண்டிருந்தேன்.. அப்போது சரியாக அப்பாவிடம் வகையாக மாட்டிக்கொண்டேன்.. என்னை ஏதும் திட்டவில்லை. கோபப்படவும் இல்லை.. அமைதியாக சென்றுவிட்டார். இன்னிக்கு நமக்கு ஆப்புதான் என்று மிரண்டு கொண்டு இருந்தேன். ஏனோ அம்மாவிடம் அப்பா சொல்லவில்லை.. என் திருட்டு பழக்கத்துக்கும் ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டேன் அதோடு.. ஒருவேளை என்னை மாட்டிவிட்டிருந்தால் நான் இன்று ஒரு மாபியா தலைவன் ஆகி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.. உள்ளுக்குள் ஒரு சிங்கம் உறங்குது மக்கா sleep.gif
——————–
பணத்தைப்பற்றிய சிந்தனைகளை அப்பா அறவே தவிர்த்தவர். அதன் சமூக முக்கியத்துவம் தெரிந்தாலும் இதுவே போதும்டா என்ற ரீதியில் வாழ்க்கையை கொண்டாடியவர். நான் வெஜ் மன்னர். எனக்கும் அந்த நான்வெஜ் வெறி உண்டு.. ஒருவாரம் நான் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் பக்கத்தில் இருப்பவரை நறுக்கென்று கடித்தாலும் கடித்துவிடுவேன்.. tongue.gif
——————–
எங்கப்பா தண்ணி அடிப்பார். புல்லா அடிச்சா நாம் இடத்தை காலி செய்துவிடுவது உசிதம். ஒரு விசயம் சொல்லி நாம் ரசித்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டால் அதையே 20 முறை சொல்லி கழுத்தை ரெண்டாக்குவது குடிமன்னர்களின் வழக்கம். தலயும் விதிவிலக்கு அல்ல… அதேநேரம் ஓர் எல்லைக்குள் இருந்தால் செம கலாட்டா செய்வார். குறிப்பாக எங்கம்மாவை அதிகமாக கிண்டலடிப்பார். உண்மையில் எங்கம்மா நிறத்தில் எங்கப்பா விட குறைவு. இது போதாதா..? அவர்கள் ஒரு  ஜாலியான தம்பதிகள். biggrin.gif
——————–
எங்கப்பாவுக்கு நாய்கள் என்றால் மிக அலர்ஜி. எந்த நாயாக இருந்தாலும் எங்கே கண்டாலும் ஒரு கல்லை தூக்கி அதன் மேல் வீசாவிட்டால் தூக்கம் வராத வியாதி அது. சாலையில் போகும்போது கூட அந்த காரியத்தை வண்டிய நிறுத்தி செய்வது உண்டு. எனவே அவருக்கு எதிரி நாய்கள் பல உண்டு. சிலவேளைகளில் வகையாக மாட்டிக்கொள்வார். முக்கியமானவர்களும் ஊர்கதையில் இருக்கும் நேரம் அங்கே க்ராஸ் ஆகும் ஒருசில நாய் இவரை பார்த்து நின்று ‘உர்ர்ர்ர்…குர்ர்ர்ர்.ர்ர்..’ என்று சவுண்டு விட்டுவிட்டுதான் இடத்தை காலி செய்யும். laugh.gif கை கல்லை எடுக்க ஊறினாலும் ஒரு கவுரதைக்காக மாட்டிக்கொள்ளும் நிலை அப்போது..

——————–

அரசியல் என்ற பிசாசு எங்கள் குடும்பத்தை நல்ல ஒருவழிப்பண்ணியது. என் அப்பாவின் இறுதிகாலத்தில் அரசியலில் அவர் அதிகம் இழந்திருந்தார். தீரா கடனாளி ஆகி இருந்தார். அது அவரின் இருண்ட காலம். அந்த மாதிரி காலக்கட்டத்தில் அவரை ஒரு விபத்தில் இயற்கை அழைத்துகொண்டது எங்களுக்கு எல்லாம் பேரிழப்பு. வாழ்க்கையின் எந்த வொரு அசைவும் அதன்பின் எடுப்பது என்பது சிக்கலாகிவிட்டிருந்தது. அம்மாவின் கதறலும் குடும்பத்தினரின் ஓலமும் என் கண்களில் இன்றும் நிழலாடுகின்றது.
——————–
எனக்கும் என் அப்பாவுக்குமான காரணமே இல்லாத அற்ப இடைவெளிகள் இருந்தது. எனக்கு பக்குவமில்லாத பருவம் அது. ஒருவேளை இன்று இருந்திருந்தால் நானும் அவரும் நெருங்கிய தோழர்களாக இருந்திருப்போம் என்றே தோன்றுகிறது. ஒரு நல்ல நண்பனை தந்தையை இழந்துவிட்ட துக்கம் வாட்டும் பதிவு இது.

அவரைப்பற்றிய பல நல்ல குணங்கள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் உண்டு என்றாலும் ஒரு சிலதே என்னால் பதிக்க முடிந்தது.

என் தந்தைக்கு இந்த பதிவு சமர்பணம்.

செப்ரெம்பர் 18, 2007 at 7:31 முப 4 பின்னூட்டங்கள்

பிணவாசனை..

ஒரு சின்ன முயற்சி.. இது ஒரு திகில் கதை.. நான் தொடங்கி வைக்கிறேன்.. அனைவரும் இதில் புதுபுது திருப்பங்களுடன் சுவாரஸ்யமாய் எடுத்து செல்லலாம்.. என்ன சொல்றீங்க..?

————————————-

கும்மென்ற அகன்ற இருட்டு. கீச்ச் கீச்ச் என்ற மரவண்டின் சத்தம் மட்டும் உச்சமாக கேட்டுக்கொண்டு இருக்கிறது. மெல்ல புளிய மரத்தினில் நிழலில் ஊடுரும் வெளிச்சத்தில் கழுத்து அறுப்பட்ட ஒரு பிணத்தின் அருகில் ரம்யா. அந்த உடலின் கழுத்தில் இருந்து ரத்தம் வெதுவெதுப்பாக மெல்ல தரையை முத்தமிட்டுக்கொண்டு இருந்தது. திறந்தவாயும் வெளியே வந்துவிடும் அளவு உயிர்பிச்சை கேட்ட கண்களும் பார்பவர்களை மிரளச் செய்யும் நிலையில் இருந்தன. ரம்யாவின் மிரண்ட கண்கள் ரத்தத்தை நிரப்பி இருந்தது.

ரம்யாவின் கைகளில் இருந்த கத்தியில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது தெறித்து கைவிரல்கள் அனைத்தும் அந்த சிவப்பான ரத்ததத்தில் தோய்ந்து கெட்டியாகி இருந்தது. சுற்றும் முற்றும் பார்வையை அலையவிட்டப்படி ரம்யா மேலே வானத்தை பார்த்துக்கொண்டு இருக்கும்போது அவர் கால் மீது ஏதோ ஊர்ந்து செல்லும் உணர்வ்வில் கீழே பார்க்க…”ஹோவ்வ்வ்..” என்று கத்திக்கொண்டு மயங்கி கீழே சரிந்தாள்.சட்டென்று மிரண்ட அந்த கட்டுவிரியல் நாக்கைவெளியே நீட்டி ஆட்டியப்படி மினுமினுக்கும் கண்களுடன் அலைந்து அலைந்து வேகமாக கீழே கிடக்கும் கூழாங்கற்களின் மீது ஊர்ந்து சென்றது.

அப்போது…

லீனா அண்ணா தொடர்கிறார்

துரத்தில்…….
மிக வேகமாக அந்த வண்டி வந்து கொண்டிருந்தது.அதன் முன் விளக்குகள் பளீரென எரிந்து அந்தச் சாலையை வெளிச்சமாக்கியது.அதனுள்ளே, சமீபத்தில் போலீஸ் சூப்பிரண்டண்ட் பதவியேர்ர லீனா மிகவும் ளைப்புடன் சாரதியின் பக்கத்து இருக்கையில் லமர்ந்திருந்தார்.
அந்த சந்திர வெளிச்சத்தில் கூட அவரது கம்பீரமான் தோற்றம் அவரை ஒரு நேர்மையான அதிகாரி என்பதைப் பறை சாற்றியது.கழுத்தற்பட்ட பிணத்திற்கு அருகே ரம்யா மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடந்த இடத்தை அந்த வண்டி அண்மிக்கப் போகும் போது,

சாலையின் குறுக்கே…….

மற்றொருவர்

கழுத்தறு பட்ட பிணத்திற்கு அருகே ரம்யா மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடந்த இடத்தை அந்த வண்டி அண்மிக்கப் போகும் போது, அதன் சத்தம் மயங்கிய ராம்மியாவை எழுப்பியது

சாலையின் குறுக்கே…….

ஒரு பெண் அவசர அவசரமாக ஓடுவதை பார்த்த லீனா ………அந்த பெண்ணை பிடிக்க உத்தரவு இட்டார். ரம்யாவோ சாமர்தியமாக சாலையை விட்டு புதர்களில் ஒடினார். ஜீப் சற்று வேகம் குறைக்க ஒரு கல்லை எடுத்து சாரதியின் தலையை குறிவைத்து அடித்தார் ரம்யா , தடுமாறிய ஜீப் ஒரு மரத்தில் மோதி நின்றது. ஜீப் சாரதி அங்கேயே சரிந்தார். லீனா வின் கை துப்பாக்கியின் ட்ரிகர் இடித்த அதிர்வில் ஜாம் ஆனது. லீனாவுக்கு தொல்பட்டையில் நல்ல அடி.
சமிபத்தில் பெய்த மழையில் ஒரு பெரிய வேப்பமரம் ஒன்று விழுத்து கிடந்தது. அதில் இருந்து ஒரு பெரிய கிளையை உடைத்து எடுத்தார் ரம்யா……..துப்பாக்கியும் வேலை செய்யவில்லை , தொலில் அடி. தொடை நடுங்க ரம்யாவை நோக்கினார் போலிஸ் சூப்பிரண்டன்டன் லீனா……………………….

மீண்டும் நானே..

லீனா தைரியமாக முன்னேறினார்.. வேலை செய்யாத துப்பாக்கியை தூக்கி எறிந்துவிட்டு தன் இடக்காலை மேலே தூக்கி ஷூவுக்குள் வைத்திருக்கும் பிஸ்டலை எடுத்து ரம்யாவின் முகத்தை நேராக குறிவைக்கும் நேரத்தில் அக்கோரமான இடி ஒன்று இடிக்கிறது. மின்னலும் பளிச் பளிச்சென்று வெட்டும் நேரத்தில் இருவரின் முகங்களை கண்டுக்கொள்கிறார்கள்..

“ரம்யா தங்காய்.. நீயா அது..? ” அதிர்ச்சியுடன் வினவ…

“கிட்ட வராதீங்க…” என்று சொல்லிக்கொண்டே ரம்யா பின்வாங்கிக்கொண்டு போக..

“இதோ பார்.. உனக்கு என்ன ஆச்சு..?நீ ஏன் கொலைபண்ண.. யார் அது..? எதுக்காக கொலை செஞ்ச.. நான் உன் அண்ணன் இருக்கேன்மா.. நீ கவலைப்படாதே.. நீ அமைதியா சரண்டர் ஆகிடு.. தப்பிக்க நினைச்சா வீண்விபரீதம்தான் மிச்சம்..”

“இல்ல.. என்கிட்ட நெருங்காதீங்க..” என்று கூறி தளர்ந்த ரம்யா தரையில் அப்படியே அழுதபடி சரிகிறார்.. ஒருபுறம் சேற்றில் உக்கார்ந்து சோர்ந்து அழும் ரம்யா. இன்னொருபக்கம் என்ன ஏதென்று அறியாமல் யாரோ என்று நினைத்து வந்தால் தன் சொந்த தங்கையை எதிர்பார்க்காமல் திகைத்து இது கனவா என்று நினைக்கும் லீனா ஒருபுறம்.. அந்த வேளையில் ரம்யா தன் இருகைகளால் அங்கிருந்த சேற்றை அள்ளி லீனாவின் முகத்தில் அடிக்கிறார்.. சடக்கென்று மிரண்ட லீனாவிற்கு கண்களின் சேறும் சகதியும் புகுந்துக்கொள்ள இந்த இடவெளியில் ஓட்டம் பிடிக்கும் ரம்யாவை கஷ்டப்பட்டு துரத்துக்கிறார் லீனா..

செப்ரெம்பர் 14, 2007 at 8:09 முப பின்னூட்டமொன்றை இடுக


செப்ரெம்பர் 2007
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930