அப்பாவைப்பற்றிய சில நினைவுகள்..
செப்ரெம்பர் 18, 2007 at 7:31 முப 4 பின்னூட்டங்கள்
என் அப்பாவை பற்றிய சில நினைவுகள்..:
——————–
என் அப்பா ஒரு பக்கா விவசாயி..வேட்டி பட்டாப்பட்டி டவுசர் என்று பக்கா கிராம வாசனையொடு வாழ்ந்தவர். படித்தது என்னவோ மூன்றாம் வகுப்புதான் என்றாலும் சுத்தமாக படிப்பார்.. ஆனால் எழுத்து சரிவராது.. பெரியார் கொள்கையை முழுமையாக அனுசரித்தவர். கலைஞர் என்றால் மிகுந்த பற்றும் நேசமும் கொண்டவராக இருந்தார். கடவுள் எதிர்ப்பில் முழு நம்பிக்கை கொண்டவர். நான் இன்று ஒருமாதிரி தெளிவாக இருக்க அப்பாவின் உந்துதலே காரணம். அவரின் பல குணங்களில் என்னில் பிரதிபலிக்கின்றன.
——————–
நாங்கள் சிறுப்பிள்ளைகளாக இருந்த சமயத்தில் மிக மிக வறுமையாக வாழ்ந்த காலக்கட்டதிலும புத்தகம் படிப்பதில் எங்களை அதிகம் ஊக்கமூட்டுவார். இன்று கூட ஒரு புத்தகம் வாங்கினால் நானோ எங்கக்காவோ பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைக்கூட மறந்துவிடுவோம். சின்ன வயதில் தொடங்கிய அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது விந்தைதான்.. வயசு ஏறினாலும் புத்தி மாறலியே நைனா..:(
——————–
என் தந்தை நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். சாதூர்தியமாக பேசும் குணம் கொண்டவர். எந்த சூழ்நிலையிலும் லாவகமாக பேசுவார். அவரின் பேச்சுக்கு பெருமைக்கு சொல்லவில்லை.நிஜமாகவே அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் இருந்தது.
——————–
நான் முன்பு ஒரு பதிவு போட்டேன் ‘ ஆண்கள் ஏன் தங்கள் பெண் குழந்தைகள் மேல் பற்றும் பாசமாக இருக்கிறார்கள் ‘ என்று.. எங்கப்பாவும் அதற்கு விதிவிலக்கல்ல.. அவரை வைத்துதான் அந்த திரியே… எனக்கு பைசாவே தரமாட்டார். அக்காவுக்கு மட்டும் ஸ்பெசலாக தந்து என் வயிற்றெரிச்சலை அப்பட்டமாக அள்ளிகொள்வார்.
—————–
என் பொருளாதார வாழ்க்கை அம்மாவிடம் லவட்டுவதும் கொஞ்சம் திருடு என்றும் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தேன். ஒருநாள் ஒரு பாத்திரத்தில் அம்மா வைத்திருந்த பணத்தை நோண்டிக்கொண்டிருந்தேன்.. அப்போது சரியாக அப்பாவிடம் வகையாக மாட்டிக்கொண்டேன்.. என்னை ஏதும் திட்டவில்லை. கோபப்படவும் இல்லை.. அமைதியாக சென்றுவிட்டார். இன்னிக்கு நமக்கு ஆப்புதான் என்று மிரண்டு கொண்டு இருந்தேன். ஏனோ அம்மாவிடம் அப்பா சொல்லவில்லை.. என் திருட்டு பழக்கத்துக்கும் ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டேன் அதோடு.. ஒருவேளை என்னை மாட்டிவிட்டிருந்தால் நான் இன்று ஒரு மாபியா தலைவன் ஆகி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.. உள்ளுக்குள் ஒரு சிங்கம் உறங்குது மக்கா
——————–
பணத்தைப்பற்றிய சிந்தனைகளை அப்பா அறவே தவிர்த்தவர். அதன் சமூக முக்கியத்துவம் தெரிந்தாலும் இதுவே போதும்டா என்ற ரீதியில் வாழ்க்கையை கொண்டாடியவர். நான் வெஜ் மன்னர். எனக்கும் அந்த நான்வெஜ் வெறி உண்டு.. ஒருவாரம் நான் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் பக்கத்தில் இருப்பவரை நறுக்கென்று கடித்தாலும் கடித்துவிடுவேன்..
——————–
எங்கப்பா தண்ணி அடிப்பார். புல்லா அடிச்சா நாம் இடத்தை காலி செய்துவிடுவது உசிதம். ஒரு விசயம் சொல்லி நாம் ரசித்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டால் அதையே 20 முறை சொல்லி கழுத்தை ரெண்டாக்குவது குடிமன்னர்களின் வழக்கம். தலயும் விதிவிலக்கு அல்ல… அதேநேரம் ஓர் எல்லைக்குள் இருந்தால் செம கலாட்டா செய்வார். குறிப்பாக எங்கம்மாவை அதிகமாக கிண்டலடிப்பார். உண்மையில் எங்கம்மா நிறத்தில் எங்கப்பா விட குறைவு. இது போதாதா..? அவர்கள் ஒரு ஜாலியான தம்பதிகள்.
——————–
எங்கப்பாவுக்கு நாய்கள் என்றால் மிக அலர்ஜி. எந்த நாயாக இருந்தாலும் எங்கே கண்டாலும் ஒரு கல்லை தூக்கி அதன் மேல் வீசாவிட்டால் தூக்கம் வராத வியாதி அது. சாலையில் போகும்போது கூட அந்த காரியத்தை வண்டிய நிறுத்தி செய்வது உண்டு. எனவே அவருக்கு எதிரி நாய்கள் பல உண்டு. சிலவேளைகளில் வகையாக மாட்டிக்கொள்வார். முக்கியமானவர்களும் ஊர்கதையில் இருக்கும் நேரம் அங்கே க்ராஸ் ஆகும் ஒருசில நாய் இவரை பார்த்து நின்று ‘உர்ர்ர்ர்…குர்ர்ர்ர்.ர்ர்..’ என்று சவுண்டு விட்டுவிட்டுதான் இடத்தை காலி செய்யும். கை கல்லை எடுக்க ஊறினாலும் ஒரு கவுரதைக்காக மாட்டிக்கொள்ளும் நிலை அப்போது..
——————–
அரசியல் என்ற பிசாசு எங்கள் குடும்பத்தை நல்ல ஒருவழிப்பண்ணியது. என் அப்பாவின் இறுதிகாலத்தில் அரசியலில் அவர் அதிகம் இழந்திருந்தார். தீரா கடனாளி ஆகி இருந்தார். அது அவரின் இருண்ட காலம். அந்த மாதிரி காலக்கட்டத்தில் அவரை ஒரு விபத்தில் இயற்கை அழைத்துகொண்டது எங்களுக்கு எல்லாம் பேரிழப்பு. வாழ்க்கையின் எந்த வொரு அசைவும் அதன்பின் எடுப்பது என்பது சிக்கலாகிவிட்டிருந்தது. அம்மாவின் கதறலும் குடும்பத்தினரின் ஓலமும் என் கண்களில் இன்றும் நிழலாடுகின்றது.
——————–
எனக்கும் என் அப்பாவுக்குமான காரணமே இல்லாத அற்ப இடைவெளிகள் இருந்தது. எனக்கு பக்குவமில்லாத பருவம் அது. ஒருவேளை இன்று இருந்திருந்தால் நானும் அவரும் நெருங்கிய தோழர்களாக இருந்திருப்போம் என்றே தோன்றுகிறது. ஒரு நல்ல நண்பனை தந்தையை இழந்துவிட்ட துக்கம் வாட்டும் பதிவு இது.
அவரைப்பற்றிய பல நல்ல குணங்கள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் உண்டு என்றாலும் ஒரு சிலதே என்னால் பதிக்க முடிந்தது.
என் தந்தைக்கு இந்த பதிவு சமர்பணம்.
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
முத்துகுமரன் | 8:04 முப இல் செப்ரெம்பர் 18, 2007
உணர்வுகளை இயல்பாக சொல்லியிருக்கும் உங்கள் எழுத்து நடையின் மூலம் உங்கள் அப்பாவின் மீதான அன்பை உணர்ந்து கொள்ள முடிகிறது.
2.
லக்கிலுக் | 8:09 முப இல் செப்ரெம்பர் 18, 2007
நல்ல பதிவு லெனின்!
3.
leenaroy | 11:00 பிப இல் செப்ரெம்பர் 24, 2007
அருமையான பதிவு லெனின்.
அப்பாவைப் பற்றிச் சொல்லியிருப்பது மிகவும் நன்றாக உள்ளது.
தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
4.
காரூரன் | 9:35 பிப இல் ஒக்ரோபர் 17, 2007
லெனின்,
நல்ல பதிவு, மிகவும் யதார்த்தமான பதிவு. தந்தையை பற்றி மிகவும் எளிதாகவும், அவருடன் உங்களுக்கு இருந்த பிணைப்பையும் மறக்காமலும் மறைக்காமலும் எழுதியுள்ளீர்கள்.