கொலைவெறி பதிவர்களும் குண்டலகேசியும்
ஒக்ரோபர் 8, 2007 at 6:28 முப 13 பின்னூட்டங்கள்
நேற்றைய சந்திப்பு என்பது 100 % சதம் தட்டையான மொக்கை சந்திப்பு என்றால் மிகையல்ல…. அதைப்பற்றி ஒரு சுமாரான நடையுடன் தொகுத்தளிக்கும் ஒரு முயற்சி.
——————————
நான்கு மணிக்கு மிகசரீயாக அலாரம் வைச்ச மாதிரி தொடங்கும் சந்திப்பு என்று பாலாவும் லக்கியும் தோள்தட்டினாலும் தொடங்கியது என்னவோ 5 மணிவாக்கில்தான்.. இதிலென்ன கொடுமைன்னா சொன்ன அவங்களே லேட்டாம்.. நான் போன் செய்து வழி கேட்கும் இருவரும் சிக்னல் என்று சொல்லி என்னை சீண்டவில்லை என்பது குறிப்பிடதக்கது.
——————————
என் இடப்பக்கம் ஆழியூரான்.. வலப்பக்கம் இளவஞ்சி இருந்தார்கள். ஆழியூரானை பற்றி எனக்கு ஓரளவு பதிவுகள் மூலமாக தெரியும். அதனால் பிரச்சனையில்லை. இளவஞ்சி கவிஜர்.. நமக்கும் கவிஜைக்கும் காத தூரம்.. அடக்கி வாசிக்க அங்கேயே முடிவு செய்தேன்…
——————————
முதலில் அறிமுகப்படலம் என்று சொல்லி ஒரு அலப்பறையை ஆரம்பித்தார் லக்கி. தான் லக்கிலுக் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். எல்லோரும் தங்களைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்ட பின் என்ன பேசுவது என்று குழம்பிதான் போனார்கள்.. சிலர் ஞாநி என்று வாயை ஓப்பன் பண்ண.. அப்படி இப்படி தடம்புரண்டு தடக்கென்று எங்கோ போய் நின்றுக்கொண்டது பேச்சு.லிவிங் ஸ்மைல் அவர் இப்போது வேலையில் இருக்கும் சுயம் பள்ளி, அதன் கொள்கைகளை சொன்னார்.
——————————
வந்திந்த கொலைவெறியர்கள் : ஆழியூரான், போட்டோ பாலா, பாலா, தல பாலபாரதி, முரளிகண்ணன், லக்கிலுக், தொண்டன், சுந்தர், லிவிங் ஸ்மைல், ஊற்று, இளவஞ்சி, நந்தா,தமிழ்குரல், பைத்தியக்காரன்,சுகுணா.சிவஞானம் ஐயா அவர்கள்,தமிழினியன்.. மொத்தம் 16 பதிவர்கள். இதில் நான் வேஸ்ட். ஒருவார்த்தையும் பேசாமல் பேசுவர்களின் வாயை கவனித்து இருந்தேன்..
——————————
மொத்த பேச்சுக்கும் முக்கிய இடையூறாக இருந்தது சுண்டல் பையன்கள்.. ஐந்து நிமிடத்திற்கு ஒரு பையன் வந்து இம்சைபடுத்தினான். ‘ஐயா சுண்டல்..’ என்று இளவஞ்சியிடம் கேட்டால் ‘அரை மணிநேரம் கழிச்சு வாப்பா..’ இன்னொரு பையனிடம் ஆழியும் இதே டயலாக்கை விட.. அப்படியே நாலைஞ்சு பேரு அடிக்கடி வந்து இம்சையித்து கொன்றார்கள்..
——————————
சரி முதலில் சுக்குகாப்பி சாப்பிட ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த சுக்குகாப்பி விற்கும் பையன் அவன் காப்பி டப்பாவின் மூடியில் பட்டம் கட்டிவைத்துக்கொண்டு அப்படியே அதாவது பட்டம் விடுதலும், வியாபாரமும் ஒரே நேரத்தில்.. இதைக்கண்ட பலர் இதுதான் சான்ஸ் என்று கவிதைகளை பொழிந்து கூட்டத்தை கலைக்க ஏற்பாடு செய்தார்கள். கொலைவெறி பதிவர்கள் என்பதற்கு சரியான அர்த்தம் அங்கே விளங்கியது. ஆனால் கடைசியில் பையன் ‘அது நான் விளையாட்றதுக்கு இல்லண்ணே… சேல்ஸ்க்கு.. வேணுமான்னே..’ என்று ‘ங்கொய்யால’ பாலாவிடம் கேட்டு ஆட்டைய போட.. கவிஞர்கள் தரையை பிறாண்டி்க்கொண்டுருந்தார்கள்.
——————————
குண்டலகேசி என்ற பெயரை குண்டலமும் கேசமுமாக பிரிந்து பேன் பார்த்தார்கள் கொலைவெறியர்கள். கேத்ரின் பழநியம்மா, சில்வியா குண்டலகேசி.. அந்த பெயரை சுகுணாதிவாகரிடமும் ஆழி உருவ.. அதை லக்கி உருவ.. பார்க்கலாம்.. நானும் உருவினாலும் உருவுவேன்.
——————————
லக்கியின் பெருந்தன்மையை பாராட்டதான் வேண்டும். ஒருவருமே இலைக்காரனைப்பற்றி நினைக்காத வேளையில் அவரே வலுக்கட்டாயமாக வந்து ‘இலைக்காரன் நானில்லை…நானில்லை..’ என்று சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டார். இலைக்காரன் இந்த வலைக்காரனே என்று சில பட்சிகள் கூறுகின்றன.
——————————
இந்த ‘ங்கொய்யால..’ எவன்யா கண்டுபிடிச்சது..? தல பாலா அவர்கள் இரண்டு வார்த்தைக்கு ஒருமுறை ‘ங்கொய்யால..’ என்று எப்ப்படியோ சொருகிதான் ஆரம்பிக்கிறார்.. அது இயல்பாக வருகிறதா அல்லது தேடி தேடி சொருகி பேசுகிறாரா என்பதை அறிந்தவர்கள் விளக்கவும்.. க்கொய்யாலா.. எனக்கும் தொத்திடும் போல இருக்கு..:(
——————————
இந்த நிலையில் சில பதிவர்கள் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை காணாமல் போனார்கள்.. எல்லாம் சிகரெட்தான்.. இந்த கூட்டம் அங்கங்கே ஒரு சின்ன சின்ன மீட்டிங் போட்டார்கள்.
——————————
சுந்தர்ரும்,சுகுணா திவாகர் கொஞ்சம் லேட்டாகதான் வந்தார்கள். அதன் பின்பு சிறு சிறு குழுவாய் பிரிந்தார்கள் கொலைவெறியர்கள். வழக்கம்போல தம்மும் தப்பட்டையுமாக இருந்தார்கள். நான் மட்டும் தனியே.. தன்னதனியே.. காத்து காத்து இருந்தேன்..
——————————
ஏழரை மணிவாக்கில் என்னிடம் வந்த தல பாலா ‘ கண்ணா நீ கிளம்பு.. சீக்கிரம் கிளம்பு..’ என்று சீன் போட்டார்.. நானும் ஏமாந்து ‘பாசக்கார மனுசனா இருக்காரே..’ என்று கண்ணில் நீர் தெறிக்க வெறித்து பார்த்தபடி இருந்தேன்.. அப்புறம்தான் தெரிந்தது அண்ணன் தாகசாந்திக்கு சங்கத்தை கிளப்பிய விசயம்.. ‘எலே லக்கி.. நேரமாச்சுடா.. கெளம்பு..’ என்று சலம்புவதும் ‘ங்கொய்யால.. இன்னும் நீ கிளம்பிலயா..’ என்று பிட்டு பிட்டாக போட்டுக்கொண்டு இருந்தார்..
போக மனசில்லா விட்டாலும் பாலாவின் தீரா சொறிதலுக்கு பின்பு எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆனார்கள். இந்த பாவத்திற்கு காரணமான தல பாலாவை இங்கு அனைவரும் கண்டிக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்தி விடைப்பெற்றுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
Entry filed under: பதிவர் உலகம்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
லக்கிலுக் | 6:49 முப இல் ஒக்ரோபர் 8, 2007
//போடோ பாலா//
அய்யா! அவர் போடோ பாலா அல்ல. போட்டோ பாலா. போடோ என்பது கிழக்கிந்தியாவில் இயங்கும் ஒரு தீவிரவாத அமைப்பு.
கொஞ்சம் விட்டால் “பொடா” பாலா என்பீர்கள் போலிருக்கிறது.
2.
லெனின் பொன்னுசாமி | 6:54 முப இல் ஒக்ரோபர் 8, 2007
//அய்யா! அவர் போடோ பாலா அல்ல. போட்டோ பாலா. போடோ என்பது கிழக்கிந்தியாவில் இயங்கும் ஒரு தீவிரவாத அமைப்பு.//
ஒரு ‘ட்’ ட்டால் இவ்வளவு பிரச்சனை இருக்கும்னு நினைக்கல.. அவர் காமிரா வேறு வைத்திருந்ததால் டவுட்டே இல்லாமல் போய்விட்டது..
3.
யெஸ்.பா | 6:58 முப இல் ஒக்ரோபர் 8, 2007
அடப்பாவி.., மெய்யாலுமே உன்னை அன்பாக கிளம்பச்சொன்னதுக்கு.. தாகசாந்தி காரணமா? நான் தண்ணியை விட்டு பல நாள் ஆகிடுச்சுப்பா.. அதுவும் வாட்டர் பாக்கெட்டை குடித்தாலே வாந்தி எடுக்குற லக்கியோட போய் தண்ணி அடிக்க முடியுமா? 🙂
4.
லெனின் பொன்னுசாமி | 7:01 முப இல் ஒக்ரோபர் 8, 2007
//அடப்பாவி.., மெய்யாலுமே உன்னை அன்பாக கிளம்பச்சொன்னதுக்கு.. தாகசாந்தி காரணமா? நான் தண்ணியை விட்டு பல நாள் ஆகிடுச்சுப்பா.. அதுவும் வாட்டர் பாக்கெட்டை குடித்தாலே வாந்தி எடுக்குற லக்கியோட போய் தண்ணி அடிக்க முடியுமா//
மொத வரியை நம்பலாம்னு நினைச்சாலும் லக்கியை பத்தி சொன்னதை வைத்து உடனடியாக அதை நிராகரிக்கிறேன்.
5.
முரளிகண்ணன் | 7:02 முப இல் ஒக்ரோபர் 8, 2007
லெனின் நான் முரளிகண்ணன் முரளிகிருஷ்னன் அல்ல. கடைசியில் எல்லோரும் டீ தான் சாப்பிட்டோம். நிஜ அல்வா தருவதாக வாக்களித்து பொய் அல்வா கொடுத்த ஆழியூரான் வாழ்க.
6.
லெனின் பொன்னுசாமி | 7:04 முப இல் ஒக்ரோபர் 8, 2007
மாற்றிவிட்டேன் முரளி. கம்முனு முரளின்னே போட்டிருக்கலாம்..:D
ஆழியூரானில் அல்வா எப்படி இருந்தது..?
7.
லக்கிலுக் | 7:30 முப இல் ஒக்ரோபர் 8, 2007
//நான் தண்ணியை விட்டு பல நாள் ஆகிடுச்சுப்பா.. //
ஆல்பர்ட் தியேட்டருக்கு பக்கத்தில் வாட்டர் பாக்கெட் பார் ஒன்று இருக்கிறது. நேற்று பாலா அண்ணே அங்கே தான் ஒரு வாட்டர் பாக்கெட்டு வாங்கி சைட் டிஷ்ஷாக பொடிமாசு சேர்த்து சாப்பிட்டார்
8.
முரளிகண்ணன் | 7:35 முப இல் ஒக்ரோபர் 8, 2007
சுவையான அல்வா. நான்,இலவஞ்சி மற்றும் நந்தா மிக ஆர்வமுடன் இருந்தோம். ஆழியும் அவர் நண்பரும் நடித்த நடிப்பு இருக்கிறதே அப்பப்பா சரியான இருட்டு கடை அல்வா. சிவஞானம் அய்யா முருக்கு கொடுத்து எங்களை சமாதானப்படித்தினார்
9.
வந்தி | 7:53 முப இல் ஒக்ரோபர் 8, 2007
சூப்பர் பதிவு தம்பி. ஆனால் ஒரு விடயம் நம்பமுடியாமல் இருக்கின்றது.
//இதில் நான் வேஸ்ட். ஒருவார்த்தையும் பேசாமல் பேசுவர்களின் வாயை கவனித்து இருந்தேன்..//
வாயில்லாவிட்டால் நாய்கூட மதிக்காது என வலை வைத்துக்கொண்டு நீ மட்டும் பேசாமல் இருன்தாய் என்பதை நான் நம்பமாட்டேன். நீ பீச்சில் இருன்த ஏதோ ஒரு பிகரை சைட் அடித்திருப்பாய்.
10.
இளவஞ்சி | 10:36 முப இல் ஒக்ரோபர் 8, 2007
// இளவஞ்சி கவிஜர்.. //
யேயய்யா!
ஏனிந்த கொலைவெறி?! நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தோம்??
11.
oootru | 12:45 பிப இல் ஒக்ரோபர் 8, 2007
கூட்டத்துல அமைதியா இருந்துட்டு, நல்ல பதிவுதான்யா…
12.
senthamizh | 10:27 பிப இல் ஒக்ரோபர் 8, 2007
ஏப்பா! இந்த கூட்டமெல்லாம், எப்ப, எங்கன நடக்குதுன்னு சொன்னா நாங்களும் சித்த அங்கண வந்து மக்கமாரு, பங்காளி, மாமன் மச்சான்யெல்லாம் ஒரு நட பாத்துட்டு வருவோம்ல!
13.
ஆழியூரான் | 2:06 பிப இல் ஒக்ரோபர் 13, 2007
இப்பதான் நண்பா பாக்கேன். அப்பமே எழுதிட்டீங்க போல. அதுசரி.. ஆளாளுக்கு நான் அல்வா கொடுத்துட்டேன்னு கொலைவெறியிலதான் இருக்காங்க போல. நிஜமாவே நான் அன்னிக்கு அல்வா வாங்கிட்டு வந்தேன். நம்புங்க நண்பா..