அறிவுஜீவிகளின் அரைகுறை உளறல்கள்
நவம்பர் 27, 2007 at 4:21 முப பின்னூட்டமொன்றை இடுக
இது விகடன் பகுதியில் சமீபத்தில் வந்த கேள்வி பதில் பகுதி:
‘அபோகலிப்டோ’ படத்-தைப் போலவே, நம் நாட்-டி-லும் மக்கள் நிஜமாகவே வாழ்ந்திருப்பார்களா? அந்தப் படம் எந்த அள-வுக்கு உண்மை?
எல்லா நாடுகளுக்கும் பண்டைய வரலாறு உண்டு! ‘அபோகலிப்டோ’ படம் ஒரு விஷமத்தனமான, அதீத-மான கற்பனை. கடைசி காட்சியில், ஏதோ காட்டுமிராண்டி மக்களுக்கு ‘நாகரிகம்’ கற்றுக்கொடுப்பதற்காக ஸ்பானிஷ் படையும் பாதிரிமார்களும் கரையிறங்குவது போல மெல்கிப்ஸன் காட்டியது மகா ரீல். உள்ளே புகுந்த ஸ்பானிஷ் வீரர்கள், அந்தப் பழங்குடி மக்களை வேட்டையாடிக் கொடூரமாகக் கொன்று, ஒரு பழைமையான கலா-சாரத்தையே அழித்தார்கள் என்பது-தான் உண்மை!
இதில் மதன் இந்த படத்தை முழுமையாக பார்க்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. மெல் கிப்சன் “பேஷன் ஆஃப் த க்ரைஸ்ட்(Passion of the Christ)” படம் எடுத்ததால் அவரை ஏதோ கிறித்துவ மதபோதகர் ரேஞ்சுக்கு தாக்குகிறார். உண்மையில் இந்த படம் ஸ்பானியர்டுகளும் அதே போல பழங்குடியினரை வேட்டையாடினார்கள் என்ற பொருளில் தான் வருகிறது.
மதன் எந்த அடிப்படையில் வரலாற்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்? அவர் என்ன வரலாற்று எக்ஸ்பர்ட்டா, ரிசர்ச் செய்திருக்கிறாரா அல்லது ஃப்ரொபசரா? ஏதும் இல்லை, இவர் ஒரு கார்டூனிஸ்ட். கூகிளில் தேடி யாரால் வேண்டுமானாலும் இப்படி பதில் அளிக்க முடியும். ஏதோ தானே ரிசர்ச் செய்தமாதிரி தகவல்கள் வெளி இடுகிறார்கள். முன்பு அப்படித்தான், தமிழர்களுக்கு என்று தனி வரலாறு கிடையாது என்று உளறினார். வரலாற்று கேள்விகளுக்கு வரலாற்று எக்ஸ்பர்ட்டுகள் தானே பதில் அளிக்க முடியும்?
அதே போல தான் ஞானி என்ற எழுத்தாளர் ஒரு செக்ஸ் கல்வி தொடர் எழுதுகிறார், பெயர் “அறிந்தும் அறியாமலும்” ஆனால் ஞானி, டாக்டர் நாராயணமூர்த்தி மாதிரி செக்ஸாலஜிஸ்டும் இல்லை, மன நிலை மருத்துவரும் இல்லை. குறைந்தபட்சம் மருத்துவபடிப்பு கூட படிக்கவில்லை. ஏதோ புத்தகங்களை படித்து அழகாக தமிழில் மொழி பெயர்க்கிறார் – அப்படி செய்வது தவறில்லை தான். ஆனால் அவர் கட்டுரைகளுக்கு ரெபரென்ஸ், க்ரெடிட் எதையும் ஒரிஜினல் எழுத்தாளர்களுக்கு இவர் கொடுப்பதில்லை. இப்படி செய்வது, யூ எஸ்-சில் எல்லாம் ப்ளேஜரிசம்(Plagiarism). அதாவது பிறருடைய ஐடியாவை அவர்களுக்கு க்ரெடிட் கொடுக்காமல் தன் ஐடியா போல வெளியிடுவது. இப்படி செய்தது நிரூபணமானால் யூனிவர்சிட்டியை விட்டே டிஸ்மிஸ் செய்து விடுவார்கள், அவ்வளவு பெரிய தவறு. ஆனால் நம் தமிழ்நாட்டில் இவர்களை போல அறிவு ஜீவிகள் சாதாரணமாக செய்கிறார்கள்.
விகடன் இப்படிப்பட்ட அரைகுறை அறிவு ஜீவிகளை வளர்த்து விடுவது ஏன்?
-தோழி
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed