Posts filed under ‘Uncategorized’
அறிவுஜீவிகளின் அரைகுறை உளறல்கள்
இது விகடன் பகுதியில் சமீபத்தில் வந்த கேள்வி பதில் பகுதி:
‘அபோகலிப்டோ’ படத்-தைப் போலவே, நம் நாட்-டி-லும் மக்கள் நிஜமாகவே வாழ்ந்திருப்பார்களா? அந்தப் படம் எந்த அள-வுக்கு உண்மை?
எல்லா நாடுகளுக்கும் பண்டைய வரலாறு உண்டு! ‘அபோகலிப்டோ’ படம் ஒரு விஷமத்தனமான, அதீத-மான கற்பனை. கடைசி காட்சியில், ஏதோ காட்டுமிராண்டி மக்களுக்கு ‘நாகரிகம்’ கற்றுக்கொடுப்பதற்காக ஸ்பானிஷ் படையும் பாதிரிமார்களும் கரையிறங்குவது போல மெல்கிப்ஸன் காட்டியது மகா ரீல். உள்ளே புகுந்த ஸ்பானிஷ் வீரர்கள், அந்தப் பழங்குடி மக்களை வேட்டையாடிக் கொடூரமாகக் கொன்று, ஒரு பழைமையான கலா-சாரத்தையே அழித்தார்கள் என்பது-தான் உண்மை!
இதில் மதன் இந்த படத்தை முழுமையாக பார்க்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. மெல் கிப்சன் “பேஷன் ஆஃப் த க்ரைஸ்ட்(Passion of the Christ)” படம் எடுத்ததால் அவரை ஏதோ கிறித்துவ மதபோதகர் ரேஞ்சுக்கு தாக்குகிறார். உண்மையில் இந்த படம் ஸ்பானியர்டுகளும் அதே போல பழங்குடியினரை வேட்டையாடினார்கள் என்ற பொருளில் தான் வருகிறது.
மதன் எந்த அடிப்படையில் வரலாற்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்? அவர் என்ன வரலாற்று எக்ஸ்பர்ட்டா, ரிசர்ச் செய்திருக்கிறாரா அல்லது ஃப்ரொபசரா? ஏதும் இல்லை, இவர் ஒரு கார்டூனிஸ்ட். கூகிளில் தேடி யாரால் வேண்டுமானாலும் இப்படி பதில் அளிக்க முடியும். ஏதோ தானே ரிசர்ச் செய்தமாதிரி தகவல்கள் வெளி இடுகிறார்கள். முன்பு அப்படித்தான், தமிழர்களுக்கு என்று தனி வரலாறு கிடையாது என்று உளறினார். வரலாற்று கேள்விகளுக்கு வரலாற்று எக்ஸ்பர்ட்டுகள் தானே பதில் அளிக்க முடியும்?
அதே போல தான் ஞானி என்ற எழுத்தாளர் ஒரு செக்ஸ் கல்வி தொடர் எழுதுகிறார், பெயர் “அறிந்தும் அறியாமலும்” ஆனால் ஞானி, டாக்டர் நாராயணமூர்த்தி மாதிரி செக்ஸாலஜிஸ்டும் இல்லை, மன நிலை மருத்துவரும் இல்லை. குறைந்தபட்சம் மருத்துவபடிப்பு கூட படிக்கவில்லை. ஏதோ புத்தகங்களை படித்து அழகாக தமிழில் மொழி பெயர்க்கிறார் – அப்படி செய்வது தவறில்லை தான். ஆனால் அவர் கட்டுரைகளுக்கு ரெபரென்ஸ், க்ரெடிட் எதையும் ஒரிஜினல் எழுத்தாளர்களுக்கு இவர் கொடுப்பதில்லை. இப்படி செய்வது, யூ எஸ்-சில் எல்லாம் ப்ளேஜரிசம்(Plagiarism). அதாவது பிறருடைய ஐடியாவை அவர்களுக்கு க்ரெடிட் கொடுக்காமல் தன் ஐடியா போல வெளியிடுவது. இப்படி செய்தது நிரூபணமானால் யூனிவர்சிட்டியை விட்டே டிஸ்மிஸ் செய்து விடுவார்கள், அவ்வளவு பெரிய தவறு. ஆனால் நம் தமிழ்நாட்டில் இவர்களை போல அறிவு ஜீவிகள் சாதாரணமாக செய்கிறார்கள்.
விகடன் இப்படிப்பட்ட அரைகுறை அறிவு ஜீவிகளை வளர்த்து விடுவது ஏன்?
-தோழி
ஜீவஜோதியா கொக்கா…
ஜீவஜோதி வீட்டில் சூறையாடிய வழக்கில் சாட்சிகள் பல்டி அடித்ததால் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரியில் ஜீவஜோதி, தனது முதல் கணவர் சாந்தகுமாருடன் வசித்து வந்தார். “ஓட்டல் அதிபர் ராஜகோபால் அடி ஆட்களுடன் தனது வீட்டிற்கு வந்து பொருட்களை சூறையாடி சென்றார் தனது கணவரையும் கொலைசெய்தார் ‘ என்று வேளச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் ஜீவஜோதி புகார் கொடுத்தார். ராஜகோபால் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இறுதி வழக்கு விசாரணையில் சாட்சிகள் பல்டி அடித்தத்தார்கள்.. ஜீவஜோதி உட்பட.. இராஜகோபால் இன்று ராஜாமாதிரி வெளிவந்தார்..
ஜீவஜோதி பணத்திற்கு ஆட்பட்டுவிட்டாரா..? போராடியது போதும் என்று சோர்ந்துவிட்டாரா அல்லது மிரட்டலுக்கு பயந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. நீதி செத்துவிட்டது என்பது மட்டும் கண்கூடு.. மதுரையை எரித்தாளாம் கண்ணகி. அது எல்லாம் வேண்டாம் தாயீ. அட்லீஸ்ட் ஒன்றாக வாழ்ந்தவனின் உயிர் போனதுக்கு அறிந்தோ அறியாமலோ நீதான் காரணம். அந்த உணர்ச்சிகூட இல்லாம போச்சு உனக்கு.. நல்லா இரு..
‘ஓ’ பக்கத்திற்கு ஆப்பு வைக்கப்பட்டது
this is to inform you that my oh pages column in vikatan has been stopped. i have been writing this column for the last two and a half years. i thank all my reader-friends who have been expressing their support to my column and views but for which i could not have carried on so long. thank you.
gnani This message was sent to you by gnani sankaran.
ஓ பக்கங்கள் நிறுத்தப்பட்டதாக அவரின் ஆர்குட் முகவரியில் இருந்து எனக்கொரு மெயில் வந்திருக்கிறது. அவரின் அழுக்கு சிந்தனைக்கு கிடைத்த அடியாக இதை கொள்வோம்.
வாங்கோ வாங்கோ..
வாங்க வாங்க.. இது என் புது வூடு. எப்படி இருக்கு..? சுமாரா அசின் மாதிரி இருக்கா..? தங்கமாபோச்சு..
எல்லாருக்கும் நன்றி சொல்ல வாய் வருது.. ஆனா என்னமோ தடுக்குதோ.. ஓ.. நீங்க இன்னும் மொய் வைக்கல இல்ல.. அதான்.. மரியாதையா மொய் வைச்சிட்டு என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க..
எப்படி இருக்கு நம்ம் ஊடு..
Flock என்ற அற்புதமான உலாவி..
சமீபக்காலமாக நான் ப்லாக் என்ற உலாவியை உபயோகித்து வருகிறேன். இது 99 சதம் பயர்பாக்ஸை உல்டா செய்திருந்தாலும் பல புதிய விசயங்களும் சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு வெகுவாக பிடித்தும் இருக்கிறது.
உதாரணமாக நீங்கள் ஜிமெயில் ஒரு போட்டோவை சேர்க்க நினைத்தால் வழக்கமாக நாம் அட்டாச்செண்ட் என்னும் வழியில்தானே செய்ய இயலும். ஆனால் ப்ளாக் வெறும் ட்ராக் அண்ட் ட்ராப் மூலமாகவே இழுத்து வந்து சப்ஜெக்ட் காலமில் விட்டுவிடலாம். மேலும் ப்லாக் ப்ளிக்கர், போட்டோ பக்க்கெட் போன்ற தளங்களிலிருந்து எளிதாக படங்களை இணைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க்கிறது. அது மட்டுமல்ல. நமது வலைப்பூக்களில் பதிவிடவும் எளிதான முறைகளை சுட்டுக்கிறது..
இது பயர்பாக்ஸின் அப்பட்டமான காப்பிதான். ஆனாலும் நல்லா நச்சுன்னு நமீதா மாதிரி இருக்கு.. மேலும் பயர்பாக்ஸின் ஆட் ஆன்களை இணைத்தும் கொள்ளலாம். குறிப்பாக அதன் ஓவர் சீன் காட்டாத சிலவசதிகள் மற்றும் பயர்பாக்கிஸினை தொடர்ச்சியாக பார்ப்பதால் வரும் சின்ன அலுப்பு ஆகியவற்றை சற்று விட்டொழிய வரலாம் ப்லாக்கிற்கு..
அப்பாவைப்பற்றிய சில நினைவுகள்..
என் அப்பாவை பற்றிய சில நினைவுகள்..:
——————–
என் அப்பா ஒரு பக்கா விவசாயி..வேட்டி பட்டாப்பட்டி டவுசர் என்று பக்கா கிராம வாசனையொடு வாழ்ந்தவர். படித்தது என்னவோ மூன்றாம் வகுப்புதான் என்றாலும் சுத்தமாக படிப்பார்.. ஆனால் எழுத்து சரிவராது.. பெரியார் கொள்கையை முழுமையாக அனுசரித்தவர். கலைஞர் என்றால் மிகுந்த பற்றும் நேசமும் கொண்டவராக இருந்தார். கடவுள் எதிர்ப்பில் முழு நம்பிக்கை கொண்டவர். நான் இன்று ஒருமாதிரி தெளிவாக இருக்க அப்பாவின் உந்துதலே காரணம். அவரின் பல குணங்களில் என்னில் பிரதிபலிக்கின்றன.
——————–
நாங்கள் சிறுப்பிள்ளைகளாக இருந்த சமயத்தில் மிக மிக வறுமையாக வாழ்ந்த காலக்கட்டதிலும புத்தகம் படிப்பதில் எங்களை அதிகம் ஊக்கமூட்டுவார். இன்று கூட ஒரு புத்தகம் வாங்கினால் நானோ எங்கக்காவோ பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைக்கூட மறந்துவிடுவோம். சின்ன வயதில் தொடங்கிய அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது விந்தைதான்.. வயசு ஏறினாலும் புத்தி மாறலியே நைனா..:(
——————–
என் தந்தை நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். சாதூர்தியமாக பேசும் குணம் கொண்டவர். எந்த சூழ்நிலையிலும் லாவகமாக பேசுவார். அவரின் பேச்சுக்கு பெருமைக்கு சொல்லவில்லை.நிஜமாகவே அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் இருந்தது.
——————–
நான் முன்பு ஒரு பதிவு போட்டேன் ‘ ஆண்கள் ஏன் தங்கள் பெண் குழந்தைகள் மேல் பற்றும் பாசமாக இருக்கிறார்கள் ‘ என்று.. எங்கப்பாவும் அதற்கு விதிவிலக்கல்ல.. அவரை வைத்துதான் அந்த திரியே… எனக்கு பைசாவே தரமாட்டார். அக்காவுக்கு மட்டும் ஸ்பெசலாக தந்து என் வயிற்றெரிச்சலை அப்பட்டமாக அள்ளிகொள்வார்.
—————–
என் பொருளாதார வாழ்க்கை அம்மாவிடம் லவட்டுவதும் கொஞ்சம் திருடு என்றும் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தேன். ஒருநாள் ஒரு பாத்திரத்தில் அம்மா வைத்திருந்த பணத்தை நோண்டிக்கொண்டிருந்தேன்.. அப்போது சரியாக அப்பாவிடம் வகையாக மாட்டிக்கொண்டேன்.. என்னை ஏதும் திட்டவில்லை. கோபப்படவும் இல்லை.. அமைதியாக சென்றுவிட்டார். இன்னிக்கு நமக்கு ஆப்புதான் என்று மிரண்டு கொண்டு இருந்தேன். ஏனோ அம்மாவிடம் அப்பா சொல்லவில்லை.. என் திருட்டு பழக்கத்துக்கும் ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டேன் அதோடு.. ஒருவேளை என்னை மாட்டிவிட்டிருந்தால் நான் இன்று ஒரு மாபியா தலைவன் ஆகி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.. உள்ளுக்குள் ஒரு சிங்கம் உறங்குது மக்கா
——————–
பணத்தைப்பற்றிய சிந்தனைகளை அப்பா அறவே தவிர்த்தவர். அதன் சமூக முக்கியத்துவம் தெரிந்தாலும் இதுவே போதும்டா என்ற ரீதியில் வாழ்க்கையை கொண்டாடியவர். நான் வெஜ் மன்னர். எனக்கும் அந்த நான்வெஜ் வெறி உண்டு.. ஒருவாரம் நான் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் பக்கத்தில் இருப்பவரை நறுக்கென்று கடித்தாலும் கடித்துவிடுவேன்..
——————–
எங்கப்பா தண்ணி அடிப்பார். புல்லா அடிச்சா நாம் இடத்தை காலி செய்துவிடுவது உசிதம். ஒரு விசயம் சொல்லி நாம் ரசித்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டால் அதையே 20 முறை சொல்லி கழுத்தை ரெண்டாக்குவது குடிமன்னர்களின் வழக்கம். தலயும் விதிவிலக்கு அல்ல… அதேநேரம் ஓர் எல்லைக்குள் இருந்தால் செம கலாட்டா செய்வார். குறிப்பாக எங்கம்மாவை அதிகமாக கிண்டலடிப்பார். உண்மையில் எங்கம்மா நிறத்தில் எங்கப்பா விட குறைவு. இது போதாதா..? அவர்கள் ஒரு ஜாலியான தம்பதிகள்.
——————–
எங்கப்பாவுக்கு நாய்கள் என்றால் மிக அலர்ஜி. எந்த நாயாக இருந்தாலும் எங்கே கண்டாலும் ஒரு கல்லை தூக்கி அதன் மேல் வீசாவிட்டால் தூக்கம் வராத வியாதி அது. சாலையில் போகும்போது கூட அந்த காரியத்தை வண்டிய நிறுத்தி செய்வது உண்டு. எனவே அவருக்கு எதிரி நாய்கள் பல உண்டு. சிலவேளைகளில் வகையாக மாட்டிக்கொள்வார். முக்கியமானவர்களும் ஊர்கதையில் இருக்கும் நேரம் அங்கே க்ராஸ் ஆகும் ஒருசில நாய் இவரை பார்த்து நின்று ‘உர்ர்ர்ர்…குர்ர்ர்ர்.ர்ர்..’ என்று சவுண்டு விட்டுவிட்டுதான் இடத்தை காலி செய்யும். கை கல்லை எடுக்க ஊறினாலும் ஒரு கவுரதைக்காக மாட்டிக்கொள்ளும் நிலை அப்போது..
——————–
அரசியல் என்ற பிசாசு எங்கள் குடும்பத்தை நல்ல ஒருவழிப்பண்ணியது. என் அப்பாவின் இறுதிகாலத்தில் அரசியலில் அவர் அதிகம் இழந்திருந்தார். தீரா கடனாளி ஆகி இருந்தார். அது அவரின் இருண்ட காலம். அந்த மாதிரி காலக்கட்டத்தில் அவரை ஒரு விபத்தில் இயற்கை அழைத்துகொண்டது எங்களுக்கு எல்லாம் பேரிழப்பு. வாழ்க்கையின் எந்த வொரு அசைவும் அதன்பின் எடுப்பது என்பது சிக்கலாகிவிட்டிருந்தது. அம்மாவின் கதறலும் குடும்பத்தினரின் ஓலமும் என் கண்களில் இன்றும் நிழலாடுகின்றது.
——————–
எனக்கும் என் அப்பாவுக்குமான காரணமே இல்லாத அற்ப இடைவெளிகள் இருந்தது. எனக்கு பக்குவமில்லாத பருவம் அது. ஒருவேளை இன்று இருந்திருந்தால் நானும் அவரும் நெருங்கிய தோழர்களாக இருந்திருப்போம் என்றே தோன்றுகிறது. ஒரு நல்ல நண்பனை தந்தையை இழந்துவிட்ட துக்கம் வாட்டும் பதிவு இது.
அவரைப்பற்றிய பல நல்ல குணங்கள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் உண்டு என்றாலும் ஒரு சிலதே என்னால் பதிக்க முடிந்தது.
என் தந்தைக்கு இந்த பதிவு சமர்பணம்.
சாட்சாத் நம்ம நேரு மாமாவேதான்..
இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா.. 😛
வாரிசு அரசியல் சரிதானா..?
வாரிசு அரசியல் சரிதானா..?
இன்று ஒரு அரசியல் வட்டத்தில் வாரிசு அரசியல் என்ற வார்த்தை மிக பிரசித்தமாக உள்ளது..!
தேவகவ்ட மகன் குமாரப்பா,
கலைஞர் – ஸ்டாலின்,
மாறன் – தயாநிதி,
ராமதாஸ் – அன்புமணி
நேரு-இந்திரா- ராஜிவ்- சோனியா- ராகுல் என்று ஒரே வாரிசு மயம்தான்..! இது என்ன கவர்மெண்ட் வேலையா.. தந்தை இறந்த்தால் மகனுக்கு அதே வேலையை கொடுப்பதற்கு..? எவ்வகையில் இது சரியாகும்..? இங்கு ஜெயலலிதாகூட எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்லிதான் வந்தார்.! வாரிசு தொல்லைகளால் உண்மையான குறிக்கொளுடன் இருப்பவர்கள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது அல்லவா..?
நான் வேகமாக சாகிறேன்.
நான் மெல்ல சாகிறேன்
என் இறுதி வினாடிகள் நெருங்குகின்றன
என் அருகினில் என் மனைவி, மகன்
என்னைச்சுற்றி ஒருசின்னக்கூட்டம்
என் கண்களை திறக்கமுயல்கிறேன்
என் கைமேல் என் மனைவி கை
என் ஆசை குடும்பம் நானின்றி என்னப்பாடுபடுமோ
அவளின் ஸ்பரிசம் என் முழு உடலும் படர்கிறது
என்னில் பாதி.. ஆனால் நான் பாதிலேயே கழறபோகிறேன்.
வாய் திறந்துப்பேசவேண்டும் என்று உந்துகிறேன்
முடியவில்லை……..
என் கைவிரல்களை கொஞ்சமாய் அசைக்கிறேன
அவள் உணர்ந்துக்கொண்டு என்னை அழைக்கிறாள
மூளை பேசு பேசு என்று கூச்சலிட்டாலும் முடியவில்லை..
அவள் வாயிலிருந்து அழும்போது ஒழுகும் எச்சில்
என் உடலில் படுகிறது.
உணர்வுகளால் உள்ளூர பார்க்கிறேன்
சுற்றிலும் ஆட்கள் நின்றிருக்ககூடும்
‘இனி இந்தப்புள்ள என்ன பாடுபடுமோ..’
‘கோமா ஸ்டேஜ்ல இருப்பதைவிட செத்துவிடுவது நல்லது.’
வார்த்தைகள் அறைவது என் காதுமுழுக்க கேட்கிறது
எல்லோர் மனமும் என் சாவை எதிர்ப்பார்கிறது.. ஏதோ
ஒரு புதிய நிகழ்ச்சியை காணும் ஆவலில் இருக்கிறார்கள் போலும்
நானின்றி எப்படி இனி குடும்பம் நடத்த இயலும்
கதறுகிறாள் என் இணைவி.
என் மகனின் விசும்பல் என் காதுகளில் எட்டுக்கிறது.
இன்னும் சிலவிநாடிகளில் என் இறப்பு கண்முன் விரிக்கிறது
அய்யோ இனி எல்லாம் அநாதையாகிவிட்டு போகிறேனே..
மனதில் ஓங்கார வலிகள்
ஆனால் அந்தவரிகள் என் காதில் பாய்கிறது
‘இதுவும் நல்லதுக்குதான் தம்பி. உங்கப்பா ரிடையர் ஆக இன்னும் 6 மாசம்தான் இருக்கு..
இப்ப போனாருன்னா அவருவேலை உனக்கு நிச்சயம்..’
நான் இனி வேகமாக சாகிறேன்.
You must be logged in to post a comment.