வாரிசு அரசியல் சரிதானா..?

வாரிசு அரசியல் சரிதானா..?

இன்று ஒரு அரசியல் வட்டத்தில் வாரிசு அரசியல் என்ற வார்த்தை மிக பிரசித்தமாக உள்ளது..!
தேவகவ்ட மகன் குமாரப்பா,
கலைஞர் – ஸ்டாலின்,
மாறன் – தயாநிதி,
ராமதாஸ் – அன்புமணி
நேரு-இந்திரா- ராஜிவ்- சோனியா- ராகுல் என்று ஒரே வாரிசு மயம்தான்..! இது என்ன கவர்மெண்ட் வேலையா.. தந்தை இறந்த்தால் மகனுக்கு அதே வேலையை கொடுப்பதற்கு..? எவ்வகையில் இது சரியாகும்..? இங்கு ஜெயலலிதாகூட எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்லிதான் வந்தார்.! வாரிசு தொல்லைகளால் உண்மையான குறிக்கொளுடன் இருப்பவர்கள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது அல்லவா..?

ஏப்ரல் 25, 2007 at 9:30 முப பின்னூட்டமொன்றை இடுக

நான் வேகமாக சாகிறேன்.

நான் மெல்ல சாகிறேன்
என் இறுதி வினாடிகள் நெருங்குகின்றன
என் அருகினில் என் மனைவி, மகன்
என்னைச்சுற்றி ஒருசின்னக்கூட்டம்
என் கண்களை திறக்கமுயல்கிறேன்
என் கைமேல் என் மனைவி கை
என் ஆசை குடும்பம் நானின்றி என்னப்பாடுபடுமோ
அவளின் ஸ்பரிசம் என் முழு உடலும் படர்கிறது
என்னில் பாதி.. ஆனால் நான் பாதிலேயே கழறபோகிறேன்.
வாய் திறந்துப்பேசவேண்டும் என்று உந்துகிறேன்
முடியவில்லை……..
என் கைவிரல்களை கொஞ்சமாய் அசைக்கிறேன
அவள் உணர்ந்துக்கொண்டு என்னை அழைக்கிறாள
மூளை பேசு பேசு என்று கூச்சலிட்டாலும் முடியவில்லை..
அவள் வாயிலிருந்து அழும்போது ஒழுகும் எச்சில்
என் உடலில் படுகிறது.
உணர்வுகளால் உள்ளூர பார்க்கிறேன்
சுற்றிலும் ஆட்கள் நின்றிருக்ககூடும்
‘இனி இந்தப்புள்ள என்ன பாடுபடுமோ..’
‘கோமா ஸ்டேஜ்ல இருப்பதைவிட செத்துவிடுவது நல்லது.’
வார்த்தைகள் அறைவது என் காதுமுழுக்க கேட்கிறது
எல்லோர் மனமும் என் சாவை எதிர்ப்பார்கிறது.. ஏதோ
ஒரு புதிய நிகழ்ச்சியை காணும் ஆவலில் இருக்கிறார்கள் போலும்
நானின்றி எப்படி இனி குடும்பம் நடத்த இயலும்
கதறுகிறாள் என் இணைவி.
என் மகனின் விசும்பல் என் காதுகளில் எட்டுக்கிறது.
இன்னும் சிலவிநாடிகளில் என் இறப்பு கண்முன் விரிக்கிறது
அய்யோ இனி எல்லாம் அநாதையாகிவிட்டு போகிறேனே..
மனதில் ஓங்கார வலிகள்
ஆனால் அந்தவரிகள் என் காதில் பாய்கிறது
‘இதுவும் நல்லதுக்குதான் தம்பி. உங்கப்பா ரிடையர் ஆக இன்னும் 6 மாசம்தான் இருக்கு..
இப்ப போனாருன்னா அவருவேலை உனக்கு நிச்சயம்..’

நான் இனி வேகமாக சாகிறேன்.

ஏப்ரல் 25, 2007 at 9:28 முப பின்னூட்டமொன்றை இடுக

யாருக்கு என்ன பரிசு கொடுக்கலாம்.

இது டிசம்பர்.பரிசுகள் பரிமாறும் காலம். நாம் எல்லோருமே சில சமயங்களில் யாருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என திணறிய்ருக்கிறோம்.. நாம் வாங்கி அளிக்கும் பரிசு ஒருவேளை ஏற்கனவே அவரிடம் இருந்து பயன் படாது போய் விடுமோ எனயோசனையில் ஆழ்ந்திருக்கிறோம். இந்த கவலைகளை தீர்க்க இதோ வந்திருக்கிறது ROBB REPORT வழங்கும் 21ULTIMATE GIFT IDEA.

அவர்கள் தந்ததில் சில கிப்ட் ஐடியாக்களை இங்கே தருகிறேன்.

1.TRIP TO MOON : Take your loved one for a Moon Trip விலை அதிகமில்லை. வெறும் 100 மில்லியன்கள்தான்.

2.18 HOLE GOLF RESORT: உங்கள் அன்புக்கு பாத்திரமானவருக்கு சொந்தமாக 700ஏக்கர் நிலத்தில் கரீபியன் ஐலன் டில் ஒரு கோல்ப் ரிசார்ட் வாங்கி தாருங்கள் . விலை:64மில்லியன்

3.ROYAL CLIPPER SHIP: இந்த சொகுசுக் கப்பலின் விலை வெறும் 56மில்லியன் தானாம். 57 ஆக இருந்ததாம் இப்போதுதான் குறைத்து இருக்கிறார்கள். Right time to buy.

4.MIAMI PARADISE HOUSE : சவுத் புளோரிடாவில் 68 ஏக்கர் நிலத்தில் சின்னதாய் ஒரு வீடு, 40 மில்லியனில் கதை தீரும்.

5.CHANGE THE NAME OF NORTH FLORIDA UNIVERSITY: 15,300 பேர் பயிலும் இந்த யூனிவர்ஸிட்டிக்கு 4 கல்லூரிகளாம். A $5 million donation for an individual college, and a $20 million donation for all four.

6. BUGATTI VEYRON LUXURY CAR: இந்த் 987 ஹார்ஸ் பவர் கொண்ட கார் 7 நொடிகளில் 120மைல் கடப்பு சக்தி கொண்டதாம்.

6.HOME THEATRE: தியோ கிலோமிர்கிஸ் என்ற நிறுவனம் உங்கள் வீட்டில் 23பேர் உட்கார்ந்து பார்க்கும் ஹோம் தியேட்டர் கட்டித் தர முன் வந்துள்ளது, சில்லறை காசு 1.4மில்லியனை வாங்கிக் கொண்டு.

7.TOUR AT BOWMORE WHISKY CO: உலகபிரசித்தி பெற்ற பவுமோர் விஸ்கி கம்பெனி உங்களையும் உங்கள் நண்பர்கள் 6பேரையும் 7 நாட்கள் உலக் டூர் அழைத்து செல்கிறது. விலை US$ 740,000. சிறப்பு என்னவென்றால் நீங்கள் டூர் செல்லும் வருடம் இந்த கம்பெனி உங்களுக்காக மது தயாரிக்கும். 12 வருடங்கள் கழித்து பதப்பட்ட மது பாட்டில் உங்கள் கைக்கு வந்து சேரும்.

இந்த பரிசுகள் சரியில்லை என்றால் நீங்களே வேறு பரிசை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

கூடுதல் பரிசு விபரங்களுக்கு
http://www.robbreport.com/Articles/Leisure…-2005/Index.asp

திசெம்பர் 3, 2006 at 4:57 பிப பின்னூட்டமொன்றை இடுக

33% இட ஒதுக்கீடு

ஒரு மசோதா–& அதற்கு எல்லோருடைய ஆதரவும் உண்டு. ஆனால், அதை நிறைவேற்ற முடியாது. இப்படி ஒரு அதிசயக்கூத்து, கடந்த பத்து ஆண்டுகளாக நமது நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 1996&ல் அப்போதிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங் களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தரும் மசோதாவை அறிமுகப்படுத்த முயற்சித்தது. அப்போது, அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் அதை ஆதரித்துதான் பேசி னார்கள். ஒருபுறம் அப்படி பேசிக்கொண்டே இன்னொரு புறம் அந்த மசோதா வந்து விடாமலும் பார்த்துக் கொண்டார்கள்.

லாலு பிரசாத் யாதவும், முலாயம் சிங் யாதவும் இந்த மசோதா வின் வெளிப்படையான எதிர்ப்பாளர்கள் என்றால், அதை முறைமுகமாக எதிர்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அதனால்தான் இந்த மசோதாவை இது வரை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தக்கூட முடியவில்லை. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப் படும் என அறிவிக்கப்பட்டி ருக்கிறது. முதலில் பெரிய மனசு பண்ணி அதற்கு ஒப்புக் கொண்ட லாலு பிரசாத் யாதவ், இப்போதோ இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன் னால் அனைத்துக் கட்சிக் கூட்டத் தைக் கூட்டி எல்லோரிடமும் கருத்துக் கேட்க வேண்டுமென்று திடீர் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார். பெண்களுக்கு இருபது சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்தால் போதுமென்று கூறும் முலாயம்சிங் யாதவோ, இந்த மசோதா அறிமுகப் படுத்தப்பட்டால் எதிர்ப்போம் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். பிராந்திய கட்சி களைப் பொறுத்தவரையில், இந்த மசோதாவை வெளிப்படை யாக ஆதரித்துக் குரல் கொடுத்திருக்கும் முக் கியமான கட்சி என்றால், அதில் வருவது தி.மு.க.மட்டும் தான்.

காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தி.மு.க. எல்லாம் சேர்ந்து இப்போது நாடாளு மன்றத் தில் 206 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மசோதாவை நிறைவேற்ற இவர்களின் ஆதரவு மட்டும் போதாது. பி.ஜே.பி. தற்போது என்ன நிலை எடுக்குமென்று தெரியவில்லை. இந்த சூழலில் இந்த மசோதாவின் தலைவிதியை நாம் எளிதாக யூகித்து விடலாம்.

நமது நாடாளுமன்றத்தில் தற்போது மொத்தமுள்ள 545 இடங் களிலும் 45 பேர்தான் பெண் உறுப்பினர்கள். ராஜ்யசபாவின் நிலவரம் சற்றுப் பரவாயில்லை. அங்கே இருக்கும் 250 இடங்களில் 28 பேர் பெண்கள். உலக நாடுகளின் மொத்த நாடாளு மன்ற இடங்களில் பெண்கள் வகிக்கும் பங்கு சுமார் 17 சதவிகிதமாகும். நமது நாடாளுமன்றத்தில் இருப்பதோ வெறும் 8.3 சதவிகிதம் மட்டும்தான்.

மிகவும் பின்தங்கிய நாடாகக் கருதப்படும் ருவாண்டாவில் பெண் உறுப்பினர்களின் அளவு சுமார் 49 சதவிகிதமாக உள்ளது. இன்னமும் தலிபான்களின் ஆதிக்கத்தின் பாதிப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் 27 சதவிகிதம் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்கள் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கும்கூட சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் போன்ற நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையே கிடையாது என்பதுதான் ஆச்சர்யம். முதலில், வாக்குரிமை இருந்தால் தானே, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண் களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கையையே எழுப்ப முடியும்.

உலக அளவில் பெண்களுக்கான வாக்குரிமையைப் பற்றி பார்க்கப் போனால்…

நமது சட்டங்கள் பலவற்றுக்குக் காரணகர்த்தாவான ஆங்கிலேயர்கள் வாழும் இங்கிலாந்தில் 1928&ம் ஆண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அந்த நாட்டின் பெண்கள் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தித்தான் இந்த வாக்குரிமையை வென்றெடுத்தார்கள்.

பெண்ணுரிமை என்றாலே நமக்கு பாரதியாரின் நினைவு வந்துவிடும். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று பாடியவர் அவர்… ‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோமிந்த நாட்டிலே’ என முழங்கியவர். ஆனால் இப்படி பாடிய நமது மகாகவி, பெண்களுக்கு வாக்குரிமை தர வேண்டும் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலகாலம் பாரதியார் ஆசிரியராக இருந்து நடத்திய ‘சக்ரவர்த்தினி’ பத்திரிகையில் 1906 ஜூன் மாதம் ‘மாதர்களின் சுதந்திரங்கள்’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை அவர் எழுதியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இடம் கேட்டுப் பெண்கள் அப்போது போராடிக்கொண்டி ருந்தனர். அதைப்பற்றி பாரதியார் அந்தக் கட்டுரையில் கண்டித்து எழுதியுள்ளார்.

‘‘இங்கிலாந்தில் பார்லிமென்ட் சபையிலே மெம்பர்களாயிருப்பதற்கும், மெம்பர்கள் தெரிந்தெடுப்பதற்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று இப்போது அத்தேச ஸ்திரீகளிலே ஒரு பகுதியார் பெருங்குழப்ப மேற்படுத்திக் கொண்டு வருகி றார்கள். இந்த மாதர்களில் பெரும்பாலோர் விவாகம் அற்றவர்கள். இவர்கள் செய்யும் புரளிகள் சகிக்க முடியவில்லை. பார்லி மென்ட் சபையிலே போய் கூச்சலிடுகிறார்கள். பிரதம மந்திரி வீட்டையும் மற்ற முக்கிய மந்திரிகளின் வீடு களையும் போய்ச் சூழ்ந்து கொண்டு தொந்தரவு செய் கிறார்கள்’’ என்று பாரதி யார் சாடியிருக்கிறார்.

பெண்களுக்கு வாக்கு ரிமை கொடுக்கப்படாததற்குக் காரணம், அவர் கள் வீட்டிலிருந்து கொண்டு தமது குழந்தை கள் முன்னுக்கு வர வேண்டு மென்று பாடுபட வேண்டுமென்பதற்காகத்தான் என்று கூறுகிறார் பாரதியார். இப்படி வாக்குரிமை கேட்டுப் போரா டும் பெண்கள், ‘அழகில்லாமையாலும், வேறு பல காரணங் களாலும் தக்கபடி விவாகப் பேறு முதலியவை அடையாத வர்களாகி, யாரோ சில புருஷர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு ‘சுதந்திரம், சுதந்திரம்’ என்று கூறுகிறார்களேயல்லாமல் அவர்கள் மனதுடன் அவ்வாறு சொல்லவில்லை’’ என்று தீர்ப்பு வழங்குகிறார்.

பெண் விடுதலைக்காக முழங்கி ‘‘தையலை உயர்வு செய்’’ எனப் புதிய ஆத்திச்சூடி எழுதிய பாரதிக்கே, பெண் களுக்கு நாடாளுமன்றத்தில் இடம் கொடுக்க மனம் வராதபோது, இன்றைய அரசியல்வாதிகளின் மனநிலையை நாம் புரிந்துகொள்வது சிரமமில்லை. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்து வந்த பாரதியே பெண்களின் வாக்குரிமை விஷயத்தில் ஒரு ஆணின் பார்வையில்தான் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். நமது அரசியல்வாதிகளோ வெளிப்படையாக ஆணாதிக்க மனம் கொண்டவர்கள். இவர்கள் தானாக முன்வந்து பெண்களுக்கு உரிமையை வழங்கி விட மாட்டார்கள். நமது அரசியல்வாதிகளின் ஆணாதிக்க மனோபாவத்தை நுட்பமாக எடுத்துச் சொல்லவே இங்கே பாரதியின் கூற்றை உதாரணமாகக் காட்டியிருக்கிறேன். மற்றபடி, பாரதி பெண்களுக்கு எதிரானவர் என்ற கருத்தில் இதைச் சொல்லவில்லை.

பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவுக்குப் புதியதல்ல. இது 1920&களிலேயே இந்தியாவில் எழும்பத் தொடங்கி விட்டது. அகில இந்திய பெண்கள் மாநாடு, இந்திய பெண்கள் அமைப்பு, இந்தியப் பெண்களின் தேசிய கவுன்சில் முதலான பெண்கள் அமைப்புகளும் காங்கிரஸ§ம், அப்போது இக் கோரிக்கையை எழுப்பின. அதற்கு பிரிட்டிஷ் அரசு உடன் படாத நிலையில் நகரத்திலி ருக்கும் பெண்களுக்காவது முதலில் வாக்குரிமை தாருங்கள் என்று அவர்கள் கேட்டனர். அதற்கும் பிரிட்டிஷ் அரசு இணங்கவில்லை. எனவே, சுதந்திரத்துக்குப் பிறகுதான் இந்தக் கோரிக்கை நிறை வேறியது. பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் போது மான அளவில் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங் களிலும் இடம்பெற முடியவில்லை.

சுதந்திரத்துக்குப்பிறகு பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைந்து வந்ததன் காரணமாக இந்தியப் பெண் களின் நிலை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசாங்கத்தால் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அது தீவிரமாக ஆய்வு செய்து 1974&ல் தனது அறிக்கையை அளித்தது. சட்டமன்ற நாடாளுமன்ற அவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு தர வேண்டுமென்று அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அரசாங்கம் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. பஞ்சாயத்துராஜ் சட்டம் உருவாக்கப்பட்டு அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 73&வது சட்டத்திருத்தம் செய்யப்பட்டபோது, இந்தப் பரிந்துரைகளைப் பரிசீலித்த மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கிச் சட்டம் இயற்றியது.

உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த பத்து ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பெண்களுக்கான இடஒதுக்கீட்டின் அனுபவம்… சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது சரியென்றே காட்டுகிறது. அப்படி சட்டரீதியாகவே இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால்தான் பெண்கள் போதுமான அளவில் அங்கே வர முடியும்.பெண்களுக்கு சட்டமன்றங்களிலும், நாடாளு மன்றத்திலும் இடங்களை ஒதுக்குவதைவிட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தும்போது அதில் பெண்களுக்கு 33 சதவிகிதத்தைக் கண்டிப்பாகக் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற நிலை வர வேண்டும். 1997&ல் டெல்லியில் நடந்த ‘இன்டர் பார்லிமென்ட்ரி யூனியன்’ மாநாட்டிலும்கூட இந்தக் கருத்துதான் ஏற்கப்பட்டது. ஆனால், இப்படிச் செய்யும்போது தோற்றுப் போவோம் எனத் தெரியவரும் இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கிவிட்டு, ‘பாதுகாப்பான’ இடங்களை ஆண்கள் எடுத்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. எனவே, 33 சதவிகித இடஒதுக்கீடு ஒன்றுதான் இதற்கெல்லாம் சரியான வழி.

இப்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை நிலைக்குழுவுக்கு (Standing Committee) அனுப்பி வைக்கப்போவதாகக் கூறுகின்றனர். ஏற்கெனவே இந்த மசோதா நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (Select Committee) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதுதான். தற்போது மீண்டும் இதை நிலைக்குழுவுக்கு அனுப்புவோம் என்பது காலம் கடத்துவதற்கான ஒரு தந்திரமே தவிர வேறல்ல.

சரிபாதியாக உள்ள பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் போதிய பங்கினை அளிக்காமல் ஜனநாயகத்தை நாம் பாதுகாத்துவிட முடியாது. அரசியல் கட்சிகள் தமது உயர் அதிகார அமைப்புகளில் பெண்களுக்கு உரிய பங்கினை அளிப்பதில்லை. அவர்கள் ‘அலங்காரப் பொருட்களாகவே’ இன்று வரையில் பார்க்கப்படுகிறார்கள்… பயன்படுத்தப்படுகின்றார்கள்! நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஆண்களால் ஆரம்பிக்கப்பட்டு, ஆண்களால்& ஆண்களுக்காக நடத்தப்படுபவையாகத்தான் இன்றுவரையில் இருக்கின்றன.

ஒவ்வொரு கட்சியிலும் மகளிர் பிரிவு எனத் தனியே ஒரு பிரிவு இருப்பதேகூட பெண்களின் சமத்துவமற்ற நிலைக்கு ஓர் உதாரணம்தான். அந்தப் பிரிவு கட்சிகளின் ‘முடிவெடுக்கும்’ அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை.

பெண்களால் செய்ய முடியாத அளவுக்கு கஷ்டமான பணியாக அரசியலைச் சொல்ல முடியாது. மிகவும் கடினமான பணிகளான உணவு உற்பத்தி, துப்புரவு போன்றவற்றில்கூட பெண்கள்தான் இன்றளவிலும் அதிகமான எண்ணிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். தங்களால் அரசியல் நிர்வாகத்தையும் திறம்படச் செய்ய முடியுமென்பதை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்கள் நிரூபித்தும் வந்திருக்கிறார்கள். எனவே நாடாளுமன்ற&சட்டமன்றங்களில் அவர்களுக்குரிய இடங்களை வழங்காமல் இனிமேலும் தள்ளிப்போட்டுக் கொண்டிருப்பது சரியல்ல.

இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகள் ஆகப்போகிறது. அதன் பலன்களைப் பெண்களுக்கு மறுத்துக்கொண்டிருப்பது சரிதானா? அரசியல் தலைவர்கள் சிந்திக்கட்டும்!

இதில் பாரதியார் பற்றிய புது தகவல்களை படித்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தேன்
மூலம் :விகடன்

நவம்பர் 30, 2006 at 5:18 முப பின்னூட்டமொன்றை இடுக

சாய்பாபா செக்ஸ் சாமியாரா..?

சிட்னியைச் சேர்ந்த `பாபா` பக்தரின் குற்றச்சாட்டு!
சிட்னியைச் சேர்ந்த ஹன்° டி க்ரேகர் 5 ஆண்டுகள் பாபாவின் தீவிர பக்தராக இருந்தார். நவம்பர் 12, 2000 தேதியிட்ட `தி சண்டே ஏஜ்’ என்ற பத்திரிகையில் முதல் முதலில் பாபாமீது செக்° குற்றம் சுமத்தினார்.
“நான் பாபாவின் காலைத் தொட்டு வணங்கியபோது அவர் என் தலையை அவரது இடுப்புப் பகுதியில் வைத்து அமுக்கினார். அவர் பிடி லேசாகத் தளர்ந்ததும் நான் என்னை விடுவித்துக் கொண்டேன். பாபா அவர் ஆடையை விலக்கி அரை குறையாக **** காட்டினார். நீ அதிர்ஷ்டசாலி என்று சொல்லி அவர் இடுப்பை என் முகத்தில் அழுத்தப் பார்த்தார். நன்கு யோசித்த பிறகு நான் இதைச் செய்ய இங்கு வரவில்லை என்று முடிவு செய்தேன். அவர் மனம்தான் எனக்கு வேண்டும் என்று பாபாவிடம் சொன்னேன். அவர் தன் உடைகளைக் களைந்துவிட்டு, அவர் மனம் என்னிடம்தான் இருப்பதாகச் சொன்னார். இப்படி `கையும் களவுமாக’ மாட்டிக் கொண்டார் பாபா.’’
புரிந்துகொண்டேன்.’’
`இந்தியா டுடே’, டிசம்பர் 6, 2000
——————————————————————————–

ஸ்வீடன் நாட்டுக்காரரின் குற்றச்சாட்டு….
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கானி லார்சன் 21 ஆண்டுகளாக பாபா பக்தர், அவருடைய குற்றச்சாட்டுகளின் பகுதி லண்டன் `தி டெய்லி டெலிகிராப்’ நாளிதழில் அக்டோபர் 20, 2000 அன்று வெளியானது.
“பாபா என்னை பல தனிப் பட்ட நேர் காணலுக்காக அழைத் தார். அவர், தான் கடவுளென்றும், எனது பிரச்சினை களைத் தீர்க்க உதவுகிறேன் என்றும் சொன்னபோது நம்பினேன். ஆனால், அவர் எனது பிறப்புறுப்புகளைத் தொட்டு எண்ணெய் பூசி விட்டார்; மைதுனம் செய்துவிட்டார். அவருக்கும் அதையே செய்யுமாறு என்னையும் கேட்டார். அவர் என்னோடு பலமுறை ஓரல் செக்ஸிலும் ஈ டுபட்டார். அவர் என்னிடமும் அப்படியே செய்யும்படி கேட்டபோது நான் பின்வாங்கினேன்.’’
புரிந்துகொண்டேன்.’’
`இந்தியா டுடே’, டிசம்பர் 6, 2000
——————————————————————————–
ஜெர்மனியர் ஒருவரின் குற்றச்சாட்டு!
ஜென் சேத்தி மியூனிச்சுக்குக் குடியேறிய ஜெர்மானியர், பத்து ஆண்டுகள் பாபாவின் விசுவாசியாக இருந்தார். செப்டம்பர் 18, 2000-ஆம் தேதியிட்ட ஃபோக° என்ற இதழில் பாபாமீது செக்° குற்றம் சுமத்தினார்.
“ஒரு தனி அறையில் வைத்து பாபா என்னை அருகில் வரச் சொன்னார். என் உதட்டோடு உதடாக முத்தமிட்டார். “பயப்படாதே, இது நல்ல வாய்ப்பு. இதற்காக பலர் மாதக் கணக்கில் காத்திருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காதது உனக்குக் கிடைத்திருக்கிறது’’ என்றார். பேன்ட் ஜிப்பை அவிழ்த்து, `அந்தப்’ பாகத்தில் கை வைத்தார். ஆனால், என்னுடைய `அது’ எழும்பவில்லை. காரணம், எனக்கு செக்ஸில் ஆர்வமில்லை. நான் மிகவும் வெறுத்துப் போனேன். `அது ரொம்ப தளர்வா இருக்கு. ஆற்றலை வீணாக்காதே’ என்று அசிங்கமாகப் பேசினார். அன்றுதான் அவர் சுயரூபத்தைப் புரிந்துகொண்டேன்.’’
`இந்தியா டுடே’, டிசம்பர் 6, 2000

நவம்பர் 17, 2006 at 7:31 முப பின்னூட்டமொன்றை இடுக

குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம்

கன்னத்தில் விழுந்த அந்த பலமான அடியை அவள் எதிர்பார்க்கவில்லை. அடித்தவன் அவளைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவன்தான். தோழியுடன் இரண்டு மணிநேரம் அவள் ஷாப்பிங் சென்று வந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ மன உளைச்சலில் அடித்து விட்டான் என்றும் இன்றோடு முதலும் கடைசியுமாக இந்தத் துயரம் முடிந்துவிடும் என்றும் அவள் நம்பினாள். ஆனால் நாட்கள் நகர நகர அடியும் வசவும் அதிகரிக்கவே செய்தன. ஒருகட்டத்தில் தாங்கமுடியாமல் அவள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தாள்.

இது ஏதோ தமிழகத்தில் பெண்சிசுக் கொலை நடக்கும் பின்தங்கிய மாவட்டத்தில் நடந்த சம்பவம் என்று உங்களுக்குத் தோன்றலாம். ‘சதி’ போன்ற செயல்கள் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி என்று சிலர் கருதலாம். இல்லை… இதுபோன்ற சம்பவங்கள் உலகின் பல நாடுகளிலும் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் இருந்து இந்தியப் பெண்களுக்கு ஓரளவு விடுதலை கிடைத்திருக்கிறது. ‘குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம், 2005’ (Protection of women from Domestic Violence Act 2005) கடந்த அக்டோபர் 26&ம்தேதியில் இருந்து நடை முறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு நெல்லையில் ஓர் அரசு ஊழியர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இருந்த மற்ற சட்டங்களைவிட இந்தச் சட்டம், குடும்ப வன்முறையைப் பரந்த அளவில் வரையறுக்கிறது. உடல்ரீதியிலான தாக்குதல், பாலியல் தொல்லை, வசைச் சொற்கள், உணர்வுரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அச்சுறுத்தல் ஆகிய அனைத்தும் குடும்ப வன்முறை என்று குறிப்பிடப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், குடும்பத்தில் உள்ள பெண்களை அடித்தல், திட்டுதல், வேலைக்குச் செல்லவிடாமல் தடுத்தல், குடும்பத்தினருடனும் தோழிகளுடனும் பழகவிடாமல் தடுத்தல், மனைவியை உடலுறவுக்கு நிர்ப்பந்தித்தல், குடும்பத் தேவைக்கான தொகையைக் கொடுக்காமல் இருத்தல், மனைவியின் சம்பளத்தைப் பறித்தல் என்று பலவகையான செயல்கள் வன்செயல்கள் ஆகின்றன. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்த ஆணுக்கு ஓராண்டு கால சிறை அல்லது ரூபாய் 20,000 அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படலாம்.

இதில் மேலும் சிறப்பான அம்சம் என்னவென்றால், இது மனைவிக்குப் பொருந்துவது போலவே துணைவிக்கும் பொருந்தும். அதாவது சட்டப்பூர்வமான மனைவி மட்டுமல்ல, அவனுடன் வசிக்கும் மண உறவுக்கு அப்பாற்பட்ட தொடர்புகளுக்கும் பொருந்தும். மகள், அம்மா, சகோதரி, ஆண் அல்லது பெண் குழந்தை என்று சம்பந்தப்பட்ட ஆணுடன் வசிக்கும் பிற உறவினர்களும் அந்த ஆணால் பாதிக்கப் பட்டால் புகார் அளிக்கலாம். இந்தப் புகாரைப் பாதிக்கப்பட்டவர் மட்டுமே அளிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. அக்கம்பக்கம் வசிப்பவர்கள், சமூக ஊழியர்கள் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள்கூட தெரிவிக்கலாம். மேலும், ‘புகுந்த’ வீட்டில் மனைவிக்குச் சொத்துரிமை இல்லாவிட்டாலும், மனைவியை வீட்டைவிட்டு வெளியேற்ற கணவனுக்கு உரிமை இல்லை. மனைவிக்கும் கணவனுக்கும் அந்த வீட்டில் உரிமை உள்ளது. அவள் அந்த வீட்டில் தங்குவதற்காக நீதிபதி குறிப்பிடும் அறைகளுக்குள் கணவன் செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதிக்க முடியும்.

இந்திய வரலாற்றில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமான மைல்கல். பெண்களுக்கு வீட்டுக்கு வெளியில்தான் ஆபத்து இருக்கிறது என்ற மாயையை இந்தச் சட்டம் தகர்க்கிறது. 70 சதவிகிதப் பெண்கள் தாங்கள் வசிக்கும் வீட்டுக் குள்ளேயே வன்முறைக்கும் அவதூறுக்கும் ஆளாகிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறது. அதேசமயம் எல்லா சட்டங்களையும் போலவே இந்தச் சட்டமும் தவறாக நடைமுறைப்படுத்தப் படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பணபலம், அதிகாரபலம் மற்றும் அடியாள் பலம் ஆகியவற்றுக்குத் தலைவணங்கி சேவகம் செய்யத் தயங்காத அதிகாரிகள் சிலர் நமது நிர்வாகத்தில் உள்ளனர். மிகவும் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மதம், பண்பாடு என்ற பெயரில் நேரடியாகவும் நுட்பமாகவும் ஆணாதிக்கக் கருத்துக்களே நீக்கமற நிறைந்துள்ளன. இந்தச் சூழலில் சட்டரீதியான பாதுகாப்பு இருந்தாலும் பெண்களுக்கு நடைமுறையில் நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுவது இயல்பானது.

மேலும் ஏராளமான அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் ஏழை எளிய மக்களுக்கு இந்தச் சட்டத்தின் பலன்கள் உடனடியாகச் சென்றடையுமா என்பதும் சந்தேகமே. ஆனால் நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் மேல்தட்டு படித்த பெண்கள் உடனடியாக இந்தச் சட்டத்தால் பயன் பெறுவர் என்பது உறுதி. ஏற்கெனவே பொருளாதார சுதந்திரமும் கல்வியறிவும் பெற்றவர்கள் முதல்கட்ட பலனைப் பெறுபவர்களாக இருந்தாலும் படிப்படியாக இதன் பலனை அடித்தட்டு மக்களிடத்திலும் கொண்டு செல்ல மாநில அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏடிஸ் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும் எயிட்ஸ் விழிப்பு உணர்வுப் பிரசாரம் குறித்தும் விளம்பரங்கள் வெளியிட்டது போல் இந்தச் சட்டம் குறித்தும் விளம்பரங்களை அரசு வெளியிட வேண்டும். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வரும் புகார்களுக்குக் காவல்துறை முன்னுரிமை கொடுத்து நியாயமாகச் செயல்பட வேண்டும். இதைச் செய்யத் தவறும் அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட வேண்டும்.

இந்தச் சட்டத்தில் குறைகள் இருக்கலாம். சாதி, பொருளாதாரம், பாலினம் ஆகிய மூன்றடுக்குகளில் கஷ்டப்படும் ஏழை எளிய பெண்களுக்கு இந்தச் சட்டத்தால் உடனடியான பயன் இல்லை என்ற போர்வையில் எதிர்ப்புகள் எழலாம். பாலின சமத்துவம் இல்லாத சமூகத்தில் இதுபோன்ற சட்டங்களால் பெரிய பயன் எதுவும் விளைந்துவிடப் போவதில்லை என்ற விமர்சனம்கூட வரலாம். ஆனால் இவற்றையும் கவனத்தில் கொண்டு இன்னும் சிறப்பான தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமே தவிர இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து பின்வாங்கிவிடக் கூடாது. இன்னொரு விஷயம்… சில நல்ல ஆண்களை மிரட்டுவதற்கு இந்தச் சட்டத்தை தவறான சில பெண்கள் பயன்படுத்தக் கூடும். அப்படி நடக்காது என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் அதற்காக சம நிலையில் இல்லாத ஆண், பெண் என்ற இரு பிரிவினர்க்குச் சமமான உரிமை வழங்கும் சட்டங்களை அளிக்க முடியாது!
தொகுத்தது : பேய்குட்டி
மூலம் :விகடன்

இதைப்பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? இந்த சட்டத்தை தவறாக பயன் படுத்த வாய்ப்பு இருக்கிறதா?

நவம்பர் 15, 2006 at 10:17 முப பின்னூட்டமொன்றை இடுக

இளையராஜவும் இப்படிதனா…?

பெரும்பாலான இசயமைபாளர்கள் திருட்டு பாட்டு போடுவட்ய்ஹில் வல்லவர்கள்..! தேவா இதில் பயங்கர கில்லாடி..ரகுமான மேலேயும் குற்றச்சாட்டுகள் உண்டு..! ஆனால் இளையராஜாவின் மேல் இதுவரை நான் ஏதும் கேட்டதில்லை..! சற்று முன் நான் கேடிவில் ‘நீங்கள் கேட்ட்டவை’ என்ற படம் பார்த்துக்கொண்டிருந்தேன்..! பாடல்கள் மிக அருமையாக இருந்த்து…! டவுன் லோட் செய்ய நெட்டில் போது தேடியபோது இந்த தளம் இளையராஜாவை நாற வைத்திருந்த்து..! பாருங்கள்..! திருட்டு பாட்டு போடுவதில் நம்மாளும் சளைத்தவரில்லை போலும்…

http://www.itwofs.com/tamil-ir.html

நவம்பர் 8, 2006 at 2:37 பிப பின்னூட்டமொன்றை இடுக

புகைபிடித்தலும் அதன் எச்சங்களும்..!

சிகரெட்..கெட்டப்பழக்கம் என்று தெரிந்தும் விடமுடியாமல் இன்று பலர் இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்..! இங்கே இதை படிக்கும் பெரும்பான்மையோர் சிகரெட் குடிப்பவர்கள்..! ‘வேண்டாம்னா பட்டுன்னு விட்டுனனும்’ என்று சொல்வது ஈஸி கண்ணா..ஆனால் விடுவது அப்படி ஒன்றும் சுலபமல்ல..! புத்தாண்டு சமயங்களில் இது மாதிரி வசனங்கள் ரொம்ப பிரபலம்..! நான் இன்றிலிருந்து சிகரெட் குடிப்பதில்லை என்று சொல்லி காலரை திருப்பிக்கொண்டு திரிவார்கள்..! எல்லாம் ஒரு வாரம் தாக்குபிடிப்பார்கள்..பின்பு மெதுவாக ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சொல்லி ஆட்டத்தை முடித்த இடத்தில் இருது தொடங்குவர்கள்..!

சிகரெட்டை நிறுத்துவதற்கு மன உறுதி மட்டும் அல்ல, வேறு உதவிகளும் தேவை. சிகரெட்டுக்கு மனிதர்கள் அடிமை ஆவது அதிலிருக்கும் “நிக்கோட்டின்” என்ற பொருளுக்காக தான். அந்த நிக்கோட்டின் நம் உடலை அதிகம் சேதப்படுத்துவதில்லை. நம் உடலை சேதப்படுத்துவது புகை தான். புகையை நிறுத்த நினைப்பவர்கள் உடனடியாக லைட்டர், மாட்ச், ஆஷ் ட்ரே எல்லாம் குப்பையில் எறிந்துவிட வேண்டும். புகைப்பிடித்தலை நினைவு படுத்தும் எதையுமே அருகில் வைத்திருக்க கூடாது(இது உங்கள் புகை நண்பர்களுக்கும் பொருந்தும்).
இரண்டாவது கட்டமாக நிக்கோட்டின் பொருள் கலந்த சூயிங்க் கம்களை உபயோகப்படுத்தலாம். உடல் நிகோட்டினுக்காக ஏங்கும் போது எல்லாம் இந்த கம்களை சாப்பிடலாம்.
நினைவில் கொள்ளவும்: புகை பிடித்தல் உங்களுக்கு மட்டும் அல்ல, அதை சுவாசிக்கும் அனைவருக்குமே( முக்கியமாக உங்கள் மனைவி, குழந்தை) ஆபத்தானது.
புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் கிடைக்கும் உடனடி நிவாரணம்:
1. உங்கள் மீதும் உங்கள் உடைகள் மீது அடிக்கும் கொடுமையான பயங்கரமான சிகரெட் நாற்றம்.
2. இருமல், மூச்சு வாங்குதல்
3. குடும்பத்தினரின் பாதுகாப்பு
4. இதயத்துக்கு சற்று ஓய்வு
5. தேவை இல்லாத பண விரயத்தை தடுப்பது
நீண்ட கால நிவாரணம்:
1. நுரையீரல் புற்று நோயை தடுக்கலாம்
2. இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்
3. முக்கியமாக உங்கள் குழந்தைகளை இந்த பழக்கத்தில் இருந்து காப்பாற்றலாம்(புகைக்கும் பழக்கும் இருக்கும் பெற்றோர்களை கொண்டிருக்கும் குழந்தைகளில் 80% வரை புகைப்பவர்களாகவே இருக்கிறார்கள்)
4. முக சுருக்கத்தை குறைக்கலாம்
5. உங்கள் ஆயுளை அதிகமாக்கலாம்.

நவம்பர் 7, 2006 at 8:34 முப பின்னூட்டமொன்றை இடுக

விஜயகாந்த்:பத்தோடு பதினொண்ணு..அத்தோடு இது ஒண்ணு..!

விஜயகாந்த் என்ன விதத்தில் பெட்டர்…?

விஜயகாந்த் மீது மீடியாக்காளும், பத்திரிக்கைகளும் ஒரு மிக பெரிய யோக்கிய சிகாமணி என்பது போல சித்தரிக்கின்றன..! தமிழ்நாட்டை பிடித்துள்ள திருடர்களிடமிருந்து மீள்க வந்த ஒரு பகலவன் என்று ஏற்றி விடுவிட்டு தங்களை நல்லா விற்று பணமாக்கி கொண்டுள்ளன..! தெரியாமத்தான் கேக்கிறேன்..அவரிடம் என்ன ஸ்பெஷல் இருக்கிறது..? இவரை விட புத்திசாலிகளும், அறிவாளிகளும் அரசியலில் இல்லையா..? கார்கில், சுனாமி,வெள்ளம் போன்ற சமயங்களில் இவர் சில லட்சங்களை வாரியிறைக்கிறார்..ஒத்துக்கொள்கிறேன்..! அதெல்லாம் கருப்பை வெள்ளையாக்கும் வித்தை..! சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் டெக்னிக் தான் தல..!

சரி..தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன உதாரணமாக இருக்கிறார்…? அந்த் காலத்தில் ராதிகாவிடம் இவர் ஆடாதா ஆட்டமா..? ராதிகா தன் வாட்மேனை விட்டு கழுத்தை பிடித்து இவரை வெளியேற்றியது எல்லோரும் மறந்துட்டாங்க..அதாங்க இவர்களை போன்றவர்களுக்கு வசதியா இருக்கு.. அதேமாதிரி இவர் ஒரு மொடாக்குடியர் என்று எல்லோருக்கும் தெரியும்..!

இவருக்கு கல்யாண மண்டபம்,கல்லூரி உள்ளன..அய்யா என் கேள்வி : இவர் கல்யாண மண்டபத்தில் ஏழைகளுக்கு இடம் உண்டா..? ஒரு நாள் வாடகை பல ஆயிரங்களில் இருக்கும்..கல்லூரி..சொல்லவே வேண்டாம்…நாக்ரீகமாக கொள்ளை அடிக்க சிறந்த வழி..காலெஜ் ஆரம்பியுங்க.. எனக்கும் எதிர்காலத்துல ஒரு ஐடியா இருக்கு..

கலைஞர் தன் மகனை ஏத்தி விட்றார் , ராம்தாஸ் அன்புமணி என்று பல வாரிசு அரசியலை பற்றி பேசுகிறோம்..! ஏன் நம்ம கேப்டன் தன் மச்சானை தேர்தலில் முன்னிலைப்படுத்த வில்லையா..? அவர் மனைவியின் ரோல் என்ன யாருக்கும் தெரியாதா..? அவர் பிள்ளைகளையும் கொண்டு வருவார்..என்ன சின்ன பசங்களா இருக்காங்க..அதான் கொஞ்சம் காத்திருக்கிறார்..!

இவரு பத்தோடு பதினொண்ணு..அத்தோடு இது ஒண்ணு..! இவரிட ஏதும் ஸ்பெஷல் எனக்கு தெரியவில்லை..!

ஒரு வேளை இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!

ஒக்ரோபர் 28, 2006 at 8:08 முப பின்னூட்டமொன்றை இடுக

தூக்கு தண்டனையும் ,குழப்பமான மனநிலையும்

குழப்ப நிலையில் தூக்கு தண்டனை

நாடெங்கிலும் இப்பொழுது தூக்குதண்டனை தேவையா..என்ற வினா எங்கும் எதிரொலிக்கிறது. முன்பெல்லாம் விட எழுந்திருக்கும் இக்காலம் யோசிக்கவேண்டிய கால நிலை கவனிக்க தக்கது..! பாராளுமன்ற தாக்குதலில் சம்மந்த இருப்பதாக அப்சலுக்கு தூக்குதண்டனை எனும் நிலையில் இது கொஞ்சம் பெரும்பான்மையான நபர்களால் பேசப்படுகிறது. தூக்கு வேண்டும் என்போர் எல்லாம் தன் வீட்டினருக்கோ, குடிம்பத்தினருக்கோ இத்தண்டனை வந்திருந்தால்… இப்படிதான் நீதிக்கு கொடியேந்தி வாய்வலிக்க கத்தி இருப்பார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி!

சில சமூக காவலர்கள் தனக்கென்று ஒரு நீதி ஊருக்கெல்லாம் ஒரு நீதி என்னும் கோட்ப்பாட்டில் வாழ்கிறார்கள்..! இந்த போலிகளை முதலில் கண்டறிந்து கொள்தல் அவசியம்..!

வலி என்பது எல்லோரும் பொதுவானது..! அப்பாவி ஆறுமுகத்திற்கு கை ஒடிந்தால் உணரும் வலி மன்மோகன் சிங்குக்கு கை ஒடிந்தாலும் வரும்..! அதுதானே உண்மை..? உயிர் உயிர்தான்..அது நிதர்சனாமானது..! நம்மை போன்றவர்களுக்கு இருக்கும் உயிர்தான் எல்லாருக்கும் என்ற மனநிலை ஏன் அரசாங்கத்திற்கும், நீதிதுறைக்கும் இல்லை..?

என் நிலை தூக்குதண்டனை வேண்டாம் என்பதே…ஆனாலும் தெரிந்தே அடுத்த உயிர்களை எடுக்கும் இது போன்ற மனம் கொண்டவர்களை என்ன செய்யலாம் என்பதே…

  • வன்புணர்ச்சியில் ஈடுப்பட்டு கொல்லும் கொடுர வாதிகளை என்ன செய்வது..? லிப்டிலேயே பலாக்காரம் செய்யும் கொடூர மனநிலை நோயாளிகளை என்ன செய்வது..?
  • தான் சார்ந்திருக்கும் தலைமைக்காக மூன்று பேரை பஸ்ஸுடன் கொளுத்திய பகவான்களை என்ன செய்யலாம்..?

இது போன்று எடுத்துக்காட்டுகள் ஏராளம்..!அமெரிக்காவில் 200 ஆண்டு ஜெயில் தண்டனை இருக்கிறது..!

தூக்குதண்டனை இல்லாத நாடுகள் பெரும்பான்மையானவை இது மாதிரி காலத்தை நீட்டுக்கும் தண்டனை தருகின்றன..!சில அவலங்களை பார்த்தால் தூக்குதண்டனை வேண்டும் போலுள்ளது..! ஆனால் ஒரு உயிரை எடுக்க நமக்கு என்ன உரிமை என்ற மனநிலையும் இருக்கிறது..! அப்படி செய்தால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்..?

நான் கொஞ்சம் குழம்பி போய்தான் இருக்கிறேன்..!

ஒக்ரோபர் 22, 2006 at 3:13 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts Newer Posts


மே 2021
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

அண்மைய பதிவுகள்