பிணவாசனை..

செப்ரெம்பர் 14, 2007 at 8:09 முப பின்னூட்டமொன்றை இடுக

ஒரு சின்ன முயற்சி.. இது ஒரு திகில் கதை.. நான் தொடங்கி வைக்கிறேன்.. அனைவரும் இதில் புதுபுது திருப்பங்களுடன் சுவாரஸ்யமாய் எடுத்து செல்லலாம்.. என்ன சொல்றீங்க..?

————————————-

கும்மென்ற அகன்ற இருட்டு. கீச்ச் கீச்ச் என்ற மரவண்டின் சத்தம் மட்டும் உச்சமாக கேட்டுக்கொண்டு இருக்கிறது. மெல்ல புளிய மரத்தினில் நிழலில் ஊடுரும் வெளிச்சத்தில் கழுத்து அறுப்பட்ட ஒரு பிணத்தின் அருகில் ரம்யா. அந்த உடலின் கழுத்தில் இருந்து ரத்தம் வெதுவெதுப்பாக மெல்ல தரையை முத்தமிட்டுக்கொண்டு இருந்தது. திறந்தவாயும் வெளியே வந்துவிடும் அளவு உயிர்பிச்சை கேட்ட கண்களும் பார்பவர்களை மிரளச் செய்யும் நிலையில் இருந்தன. ரம்யாவின் மிரண்ட கண்கள் ரத்தத்தை நிரப்பி இருந்தது.

ரம்யாவின் கைகளில் இருந்த கத்தியில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது தெறித்து கைவிரல்கள் அனைத்தும் அந்த சிவப்பான ரத்ததத்தில் தோய்ந்து கெட்டியாகி இருந்தது. சுற்றும் முற்றும் பார்வையை அலையவிட்டப்படி ரம்யா மேலே வானத்தை பார்த்துக்கொண்டு இருக்கும்போது அவர் கால் மீது ஏதோ ஊர்ந்து செல்லும் உணர்வ்வில் கீழே பார்க்க…”ஹோவ்வ்வ்..” என்று கத்திக்கொண்டு மயங்கி கீழே சரிந்தாள்.சட்டென்று மிரண்ட அந்த கட்டுவிரியல் நாக்கைவெளியே நீட்டி ஆட்டியப்படி மினுமினுக்கும் கண்களுடன் அலைந்து அலைந்து வேகமாக கீழே கிடக்கும் கூழாங்கற்களின் மீது ஊர்ந்து சென்றது.

அப்போது…

லீனா அண்ணா தொடர்கிறார்

துரத்தில்…….
மிக வேகமாக அந்த வண்டி வந்து கொண்டிருந்தது.அதன் முன் விளக்குகள் பளீரென எரிந்து அந்தச் சாலையை வெளிச்சமாக்கியது.அதனுள்ளே, சமீபத்தில் போலீஸ் சூப்பிரண்டண்ட் பதவியேர்ர லீனா மிகவும் ளைப்புடன் சாரதியின் பக்கத்து இருக்கையில் லமர்ந்திருந்தார்.
அந்த சந்திர வெளிச்சத்தில் கூட அவரது கம்பீரமான் தோற்றம் அவரை ஒரு நேர்மையான அதிகாரி என்பதைப் பறை சாற்றியது.கழுத்தற்பட்ட பிணத்திற்கு அருகே ரம்யா மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடந்த இடத்தை அந்த வண்டி அண்மிக்கப் போகும் போது,

சாலையின் குறுக்கே…….

மற்றொருவர்

கழுத்தறு பட்ட பிணத்திற்கு அருகே ரம்யா மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடந்த இடத்தை அந்த வண்டி அண்மிக்கப் போகும் போது, அதன் சத்தம் மயங்கிய ராம்மியாவை எழுப்பியது

சாலையின் குறுக்கே…….

ஒரு பெண் அவசர அவசரமாக ஓடுவதை பார்த்த லீனா ………அந்த பெண்ணை பிடிக்க உத்தரவு இட்டார். ரம்யாவோ சாமர்தியமாக சாலையை விட்டு புதர்களில் ஒடினார். ஜீப் சற்று வேகம் குறைக்க ஒரு கல்லை எடுத்து சாரதியின் தலையை குறிவைத்து அடித்தார் ரம்யா , தடுமாறிய ஜீப் ஒரு மரத்தில் மோதி நின்றது. ஜீப் சாரதி அங்கேயே சரிந்தார். லீனா வின் கை துப்பாக்கியின் ட்ரிகர் இடித்த அதிர்வில் ஜாம் ஆனது. லீனாவுக்கு தொல்பட்டையில் நல்ல அடி.
சமிபத்தில் பெய்த மழையில் ஒரு பெரிய வேப்பமரம் ஒன்று விழுத்து கிடந்தது. அதில் இருந்து ஒரு பெரிய கிளையை உடைத்து எடுத்தார் ரம்யா……..துப்பாக்கியும் வேலை செய்யவில்லை , தொலில் அடி. தொடை நடுங்க ரம்யாவை நோக்கினார் போலிஸ் சூப்பிரண்டன்டன் லீனா……………………….

மீண்டும் நானே..

லீனா தைரியமாக முன்னேறினார்.. வேலை செய்யாத துப்பாக்கியை தூக்கி எறிந்துவிட்டு தன் இடக்காலை மேலே தூக்கி ஷூவுக்குள் வைத்திருக்கும் பிஸ்டலை எடுத்து ரம்யாவின் முகத்தை நேராக குறிவைக்கும் நேரத்தில் அக்கோரமான இடி ஒன்று இடிக்கிறது. மின்னலும் பளிச் பளிச்சென்று வெட்டும் நேரத்தில் இருவரின் முகங்களை கண்டுக்கொள்கிறார்கள்..

“ரம்யா தங்காய்.. நீயா அது..? ” அதிர்ச்சியுடன் வினவ…

“கிட்ட வராதீங்க…” என்று சொல்லிக்கொண்டே ரம்யா பின்வாங்கிக்கொண்டு போக..

“இதோ பார்.. உனக்கு என்ன ஆச்சு..?நீ ஏன் கொலைபண்ண.. யார் அது..? எதுக்காக கொலை செஞ்ச.. நான் உன் அண்ணன் இருக்கேன்மா.. நீ கவலைப்படாதே.. நீ அமைதியா சரண்டர் ஆகிடு.. தப்பிக்க நினைச்சா வீண்விபரீதம்தான் மிச்சம்..”

“இல்ல.. என்கிட்ட நெருங்காதீங்க..” என்று கூறி தளர்ந்த ரம்யா தரையில் அப்படியே அழுதபடி சரிகிறார்.. ஒருபுறம் சேற்றில் உக்கார்ந்து சோர்ந்து அழும் ரம்யா. இன்னொருபக்கம் என்ன ஏதென்று அறியாமல் யாரோ என்று நினைத்து வந்தால் தன் சொந்த தங்கையை எதிர்பார்க்காமல் திகைத்து இது கனவா என்று நினைக்கும் லீனா ஒருபுறம்.. அந்த வேளையில் ரம்யா தன் இருகைகளால் அங்கிருந்த சேற்றை அள்ளி லீனாவின் முகத்தில் அடிக்கிறார்.. சடக்கென்று மிரண்ட லீனாவிற்கு கண்களின் சேறும் சகதியும் புகுந்துக்கொள்ள இந்த இடவெளியில் ஓட்டம் பிடிக்கும் ரம்யாவை கஷ்டப்பட்டு துரத்துக்கிறார் லீனா..

Entry filed under: கற்பனை சிறகுகள்.

சாட்சாத் நம்ம நேரு மாமாவேதான்.. அப்பாவைப்பற்றிய சில நினைவுகள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


செப்ரெம்பர் 2007
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: